தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய படம் ‘3’. ஸ்ருதிஹாசன், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அனிருத்துக்கு முதல் படமும் இதுதான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் படத்திலேயே அவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. தனுஷ் எழுதி பாடிய இந்தப் பாடலுக்கு பலர் ரசிகர்கள்.  அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தனுஷை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார்.


மேலும் படிக்க | RRR புதிய டிரெய்லர் வெளியீடு - அசத்தும் ஜீ5 கொடுத்த மாஸ் அப்டேட்


விருந்து மட்டுமின்றி யூட்யூபின் கோல்ட் விருதும் இந்தப் பாடலுக்கு கிடைத்தது. அதேசமயம், தமிழை கொலை செய்துவிட்டார்கள், இதுபோன்ற பாடல்களை ஊக்கப்படுத்தக்கூடாது எனவும் வாதங்கள் எழுந்தன. இருந்தாலும் பாடலை அனைவரும் ரசிக்கவே செய்தனர்.



இந்நிலையில் ஒய் திஸ் கொலவெறி பாடல் குறித்து புதிய சர்ச்சை ஒன்று தற்போது எழுந்திருக்கிறது. இந்தப் பாடலானது  துருக்கி விளம்பரம் ஒன்றிலிருந்து உருவப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. 


ஆனால் 3 படம் 2011ஆம் ஆண்டு வெளியானது. அந்த விளம்பரம் 2015ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. எனவே இங்கிருந்துதான் அந்தப் பாடல் காப்பி அடிக்கப்பட்டிருக்கிறது என தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | பிரபாஸூக்கு ஜோடியாக விஜய் ஹீரோயினுடன் பேச்சுவார்த்தை


அனிருத் இசையமைக்கும் பெரும்பாலான பாடல்கள் காப்பி அடிக்கப்பட்டவைதான் என ஏற்கனவே பலரிடம் கருத்து நிலவும் சூழலில் தற்போது இந்தப் பாடலும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR