RRR புதிய டிரெய்லர் வெளியீடு - அசத்தும் ஜீ5 கொடுத்த மாஸ் அப்டேட்

ஜீ 5 ஒடிடியில் ரிலீஸாகும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2022, 05:00 PM IST
  • ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ்
  • மே 20 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் ரிலீஸாகிறது
  • ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது
RRR புதிய டிரெய்லர் வெளியீடு - அசத்தும் ஜீ5 கொடுத்த மாஸ் அப்டேட் title=

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படம் ஆர்ஆர்ஆர். உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் மட்டும் 223 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்த வாரங்களில் வசூல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. வெளியிடப்பட்ட இடங்களில் எல்லாம் தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. தமிழகத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய ஆர்ஆர்ஆர் திரைப்படம், பாலிவுட்டில் எதிர்பார்க்காத வரவேற்பை பெற்றது. அங்கும் வெற்றிக் கொடி நாட்டியது.

மேலும் படிக்க | ஹாலிவுட், AK61 - வினோதய சித்தம் அப்டேட்டுகளை கொடுத்த சமுத்திரக்கனி

ராஜமௌலி இயக்கத்தில் ஏற்கனவே வசூலை வாரிக் குவித்த பாகுபலி திரைப்படத்தின் வசூல் சாதனைகளையும் ஆர்ஆர்ஆர் முறியடித்தது. மேலும், ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த ராஜமௌலியின் 2வது திரைப்படம் என்ற சாதனைக்கு சொந்தமானது. படத்தின் பிரம்மாண்டத்துக்கு இணையாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் கலக்கியிருந்தனர். ஒவ்வொரு பிரேமிலும் அவர்களின் நடிப்பு மற்றும் டான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாகுபலியில் கட்டப்பா கேரக்டருக்கு இணையாக இப்படத்தில் சமுத்திரகனியின் கேரக்டர் அமைந்தது. 

படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர், ஆர்ஆர்ஆர் 2 கதையை தயார் செய்யுமாறு இயக்குநர் ராஜமௌலியை கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அவரோ, காலம் தான் பதில் சொல்லும் என சிம்பிளாக முடித்துவிட்டார். இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படம் ஜீ5 ஒடிடியில் ரிலீஸாகிறது. இதற்கான தகவல் ஏற்கனவே லீக்காகியிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ஜீ5 அறிவித்துள்ளது. புதிய டிரெய்லர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் தியேட்டர் டிரெய்லரைப் போலவே ஒடிடி டிரெய்லரும் பிரம்மிக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தில் நடிக்கவில்லை என மறுத்த பிரபல நகைச்சுவை நடிகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News