Dhanush Aishwarya Divorce Reason: தமிழ் திரையுலகில் பிரபல ஜோடிகளாக இருந்தவர்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ். காதல் திருமணம் செய்து காெண்ட இவர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனுஷ்-ஐஸ்வர்யாவின் காதல் கதை:


இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், 2003ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை செலிபிரிட்டிக்களுக்காக காண்பித்த ஷோவில் ஐஸ்வர்யாவும் இருந்துள்ளார். படம் முடிந்த பிறகு தனுஷின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் ஐஸ்வர்யா. பின்பு, அதற்கு மறுநாள் தனுஷிற்கு ஒரு பூங்கொத்தை அனுப்பியிருக்கிறார். அதற்கு நன்றி கூறுவதற்காக தனுஷ் திரும்பி போன் செய்ய, அப்படியே இவர்களின் காதல் வளர்ந்துள்ளது. 


தனுஷ்-ஐஸ்வர்யாவின் காதல் சில மாதங்கள் வளர்ந்த நிலையில், இவர்களின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த திருமண விழா, சென்னையில் தடபுடலாக நடைப்பெற்றது. இவர்களுக்கு, யாத்ரா-லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். யாத்ரா, 2006ஆம் ஆண்டும் லிங்கா 2010ஆம் ஆண்டும் பிறந்தனர். 


விவாகரத்து..


ஐஸ்வர்யாவும் தனுஷும், தமிழ் திரையுலக ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தனர். இந்த நிலையில், இவர்கள் திடீரென்று தாங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். “18 வருடங்களாக நண்பர்களாகவும், காதலர்களாகவும், நலம் விரும்பிகளாகவும் இருந்தோம். எங்களின் பயணம் புரிதலுடனும், வளர்ச்சி தருவதாகவும் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தனித்தனியே புரிந்து கொள்ள இன்று பிரிந்து செல்ல முடிவெடுத்து இருக்கிறோம்” என்று தங்களின் பிரிவு குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்து இருந்தனர்.


மேலும் படிக்க | செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் சோனியா அகர்வால்! எந்த படம் தெரியுமா?


மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா? 


தனுஷ்-ஐஸ்வர்யாவின் பிரிவு திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்களின் காதலை போற்றி பேசி வந்த பலரும், இவர்களின் திருமண பிரிவு செய்தியை கேட்டதும் ஆடிப்போய் விட்டனர். பிரிவின் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்களே தவிர, உடனடியாக விவாகரத்து பெறவில்லை. இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில்தான் இருவரும் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், இவர்கள் இருவரும் மீண்டும் இல்வாழ்க்கையில் மீண்டும் இணைவதாக அடிக்கடி தகவல்கள் பரவி வருகிது. ஆனால், இருவருக்கும் தற்போது விவாகரத்து ஆகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் இல்வாழ்க்கையில் இணைந்து வாழ இருவரும் தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. 


விவாகரத்திற்கான காரணம் என்ன? 


தனுஷ்-ஐஸ்வர்யா இருவருமே தங்களது துறையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். ஒரு பக்கம் தனுஷ் நடிப்பில் கலக்க, இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் படங்களை இயக்கி கொண்டிருந்தார். தனுஷை வைத்து 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில், தனுஷ், வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்வதை விட தனது படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தாகவும், இது இவர்களின் பிரிவிற்கு பெரிய காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | சம்பளத்தை உயர்த்திய 'லவ்வர்' மணிகண்டன்.. லட்சத்தில் இருந்து கோடிக்கு ஜம்ப்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ