ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை விட தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி, விழா மேடையில் தனது மனைவியை கேலி செய்தததால் கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் அறைந்த சம்பவம் தான். அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் விருதுகளை வழங்கியது.  அதில் வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் இருவருக்குமிடையே நடந்த பிரச்சனை அனைவரையும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியது.  மேடையில் கிறிஸ் ராக் சொல்வதை கேட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித் திடீரென்று மேடைக்கு எழுந்து வந்து அங்கு நின்றிருந்த கிறிஸ் ராக்கின் முகத்தில் பலமாக தாக்கினார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மனைவி Hair Style குறித்து கிண்டல் - ஆஸ்கர் மேடையிலேயே சக நடிகருக்கு பளார் விட்ட வில் ஸ்மித்!


இந்த சம்பவத்திற்கு பிறகு சில வினாடிகள் நேரலை நிறுத்தப்பட்டு அதன்பின்னர் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  பின்னர் சில நிமிடங்களில் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது, அதனையடுத்து பேசியவர் ஒருவரின் உடலிலுள்ள குறையை கேலி செய்யக்கூடாது, மேலும் நான் அடித்ததற்கு மன்னிப்பு கூறுகிறேன் என்றும் கண்ணீர் மல்க கூறினார்.  இவர் மன்னிப்பு தெரிவித்தபோதிலும் மேடையில் அவ்வாறு செய்ததால் இவர் வாங்கிய விருது பறிபோகும் வாய்ப்பு ஏற்படும் என்று பேசப்படுகிறது.  இணையத்தில் பலரும் இவரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தும், அதே சமயம் சிலர் இது தவறானது என்றும் கூறி வருகின்றனர்.  


அகாடமி ட்விட்டரில், "எந்தவிதமான வன்முறையையும் அகாடமி மன்னிக்கவில்லை.  இன்றிரவு எங்கள் 94வது அகாடமி விருதுகளை வென்றவர்களைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உலகத்திலுள்ள அனைவரும் கொண்டாடுவதற்கு தகுதியானவர்களாக இவர்கள் மாறிவிட்டார்கள் என்று ட்வீட் செய்திருந்தது.  மேலும் ட்விட்டரில் பலரும் அகாடமி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், வில் ஸ்மித் விருதை திருப்பியளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். 



ஆம்பஸ் நிறுவனர் டான் ஹட்சன் அகாடமியின் சில வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், "மோஷன் பிக்சர் கலை மற்றும் அறிவியல் துறையில் சிறந்து விளங்குவதோடு, இதன் உறுப்பினர்கள் அனைவரும் கண்ணியம், கட்டுப்பாடு, ஒத்துழைப்பு போன்றவற்றை நிலைநிறுத்த வேண்டும். ஒழுக்கத்தை மீறும் வகையில் அந்தஸ்து, அதிகாரம் அல்லது செல்வாக்கை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு ஒருபோதும் அகாடமியில் இடமில்லை.  அகாடமி எந்த விதமான பாகுபாடும் காண்பிக்காது என்று கூறியுள்ளார்.  மேலும் இதுவரை இந்த சம்பவம் குறித்து அகாடமி இன்னும் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை, அதுமட்டுமல்லாது வில் ஸ்மித்துக்கு எதிராக கிறிஸ் ராக்கும் புகாரளிக்கவில்லை. 


வில் ஸ்மித் மனைவி ஜடா அலோபீசியா என்னும் அதிகப்படியான முடி உதிரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இவர்கள் இருவரும் 1997-ல் திருமணம் செய்துகொண்டனர், 2018 ஆம் ஆண்டில் தான் தனக்கு இந்நோய் இருப்பது குறித்து ஜடாவிற்கு தெரிய வந்தது.  அதன்பின்னர் அவர் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஆரம்பித்தார்.  இதுவரை இந்நோயிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  மேலும் வில் ஸ்மித் மேடையில் கிறிஸ் ராக்கை தாக்கிய காட்சி வேகமாக இணையத்தில் பரவி வருகிறது, அவரை தாக்கிய பின்னர் வில் ஸ்மித், அவரை நோக்கி உன்னுடைய அசிங்கமான வாயிலிருந்து என் மனைவியை பற்றி பேசாதே என்று கூறினார்.


மேலும் படிக்க | அரியானாவை சேர்ந்த நடிகைக்கு ஆஸ்கர் விருதா? ஒரு நியாயம் தர்மம் வேணாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR