மனைவியை கேலி செய்தவரை அறைந்த வில் ஸ்மித்...மவுனம் கலைத்த வில் ஸ்மித் மனைவி
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா பேசுபொருளாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆஸ்கர் விழா விருதுகளுக்காக அல்லாமல் நடிகர் வில் ஸ்மித்தின் செயலால் பேசுபொருளானது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட்டை உருவக்கேலி செய்யும் வகையில் பேசினார். அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜடா பிங்கெட், நோயின் காரணமாக மொட்டை அடித்துள்ளார். கிறிஸ் ராக்கின் கேலியை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த வில் ஸ்மித் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து மேடை ஏறிச்சென்று அவரை அறைந்தார். இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களுக்கு நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. வில் ஸ்மித்தில் இந்த செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | அடிச்சது தப்புதான், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்
எனினும் நடிகர் வில் ஸ்மித்தே கிறிஸ் ராக்கிடமும், ஆஸ்கர் குழுவிடமும் மன்னிப்புக் கோரினார். விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், தன் மனைவியின் உடல்நிலையை கேலி செய்தது தன்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டதாகவும், அன்பு பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்யவைக்கும் எனவும் வில் ஸ்மித் கூறினார்.
இச்சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட், முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது அனைத்தையும் மறப்பதற்கான நேரம், எல்லாவற்றையும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கவே தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடந்த சம்பவத்தை மனதில் வைத்து அவர் இந்த பதிவை வெளியிட்டிருந்தாலும், இதி வில் ஸ்மித்தின் பெயரையோ, கிறிஸ் ராக்கின் பெயரையோ ஜடா பிங்கெட் குறிப்பிடவில்லை.
முன்னதாக, 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கிங் ரிச்சர்டு’ படத்துக்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்டு வில்லியம்ஸின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தில் வில் ஸ்மித் ரிச்சர்டு வில்லியம்ஸாக நடித்திருந்தார். நடிகர் வில் ஸ்மித் பெறும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR