தற்போது அதிகளவில் பிரபலமாக உள்ள பெயர் வில் ஸ்மித் தான், இவரை தெரியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை. தற்போது நடைபெற்ற 94-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித் 'கிங் ரிச்சர்ட்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். பல விருதுகளை பெற்றுள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, பொதுவாகவே இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். இவர் நடிகர் மட்டுமல்லாது, ராப் பாடகராகவும் கலக்கியவர் இதற்காக இவர் சில விருதுகளையும் வாங்கியுள்ளார்.
மேலும் படிக்க | OSCAR Award 2022: கொரோனாவுக்கு மத்தியிலும் ஆஸ்கர் விருது விழா கோலாகலம்
வில் ஸ்மித்துக்கு விருது வாங்கி தந்த இந்த 'கிங் ரிச்சர்ட்' படம் அமெரிக்க திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து மக்கள் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹெச்பிஓ மேக்ஸ் போன்ற பல ஓடிடி இயங்குதளங்களில் இப்படத்தை தேடுகின்றனர். மேலும் 'கிங் ரிச்சர்ட்' படத்தின் ஓடிடி வெளியீட்டை அதிகளவில் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்த படம் மார்ச் 25ம் தேதியன்று இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
அதனையும் சிலர் பார்க்க தவறிவிட்டனர், ஆகையால் அந்த படத்தை எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போது ஆன்லைனில் பார்க்கலாம். நெட்ப்ளிக்ஸ் ஓடிடி இயங்குதளமானது சிறந்த தளமாக கருதப்படுகிறது, இதில் ஏராளமான சிறப்பான படங்கள் வெளியாகுகிறது. இந்த தளத்தில் தான் கிங் ரிச்சர்ட் படம் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும், ஏனெனில் இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் வெளியாகவில்லை.
ஒருவேளை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளத்தில் இந்த படம் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு உங்களுக்குள் ஏற்படும். இந்த இயங்குதளமும் சிறப்பான இயங்குதளம் தான், இதில் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இருப்பினும் இந்த இயங்குதளத்திலும் இந்த படம் வெளியாகவில்லை. வேறு இதில் தான் வில் ஸ்மித் நடித்த 'கிங் ரிச்சர்ட்'படம் வெளியாகுகிறது என்றால் இது ஹெச்பிஓ மேக்சில் உங்களுக்கு கிடைக்கிறது, இந்த தளத்தில் படத்தை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
மேலும் படிக்க | இந்தியாவுக்கு முதல் ஆஸ்கர் பெற்று தந்த பானு அதையா 91 வயதில் காலமானார்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR