பீஸ்டுடன் மோதும் மற்றொரு படம் - பாக்ஸ் ஆஃபீஸ் பாதிக்குமா?
பீஸ்டுடன் ஏற்கனவே கே.ஜி.எப் மோத உள்ள நிலையில் மற்றொரு ஹிந்தி திரைப்படமும் அதே தேதியில் ரிலீஸாகிறது.
இளைய தளபதி நடிகர் விஜய் மற்றும் நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில், ஆக்ஷன் பிளாக் பஸ்டர் திரைப்படமான கே.ஜி.எப் 2 அந்த தேதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை கருத்தில் கொண்ட பீஸ்ட் குழு, திரைப்படத்தை ஒரு நாளுக்கு முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு புரோமோஷன் பணிகளை சன்பிக்சர்ஸ் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு டான்ஸ் ஆடிய சவுரவ் கங்குலி!
புனிதவெள்ளி மற்றும் சித்திரைத் திருநாள் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதால், பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அடுத்தடுத்த தேதியில் ரிலீஸ் செய்கின்றன. இரண்டு படங்களும் மெகா பட்ஜெட் படங்கள் என்பதால், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் விஜய்யின் பீஸ்ட் வசூலை குவிக்கும் என்றாலும், தெலுங்கு கன்னட மொழிகளில் எதிர்பார்த்த வசூலை எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில் விஜயின் முந்தைய படங்களை விட பீஸ்ட் திரைப்படம் இப்போது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதுவே அந்த மாநிலங்களில் விஜய்கான மவுசு இருப்பதை காட்டுகிறது. இதற்கிடையே, தெலுங்கு படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஜெர்சி படமும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. இது வட இந்திய மார்க்கெட்டில் கோலோச்சும் என்பதால், கேஜிஎப், பீஸ்டின் பாக்ஸ் ஆஃபீஸ் அந்த மார்க்கெட்டில் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எப்படிருந்தாலும், திரைப்படத்துக்கு முந்தைய கணிப்புகள் எல்லாம், பட வெளியீட்டிற்கு பிறகு மாறவும் வாய்ப்பிருப்பதை திரைவல்லுநர்கள் சுட்டிக்காட்டுவதால், பாக்ஸ் ஆபீஸில் கோலோச்சும் படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | பட்டியலினத்தவர் குறித்து அவதூறு - நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR