Yashoda on OTT platform: சமந்தாவின் யசோதா... ஓடிடி தளத்திலும் கலக்கல்
நடிகை சமந்தாவுடைய ஆக்ஷன்- த்ரில்லர் திரைப்படமான `யசோதா` சமீபத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது.
இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோரது இயக்கத்தில் சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் 'யசோதா' படம் கடந்த நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாதியில் சமந்தா அப்பாவியான கிராமத்து பெண் போல நடித்து, இரண்டாம் பாதியில் அனைவரையும் அசத்தும் வகையில் அதிரடி பெண்ணாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனில் சமந்தாவே தனக்கு குரல் கொடுத்து இருக்கிறார். பணத்தேவைக்காக வாடகைத்தாயாக வரும் பெண்களை வைத்து ஒரு கும்பல் சதி வேலை செய்கிறது, அந்த கும்பல் செய்யும் திட்டங்கள் ஒவ்வொன்றையும் வாடகைத்தாயாக இருக்கும் சமந்தா கண்டறிகிறார்.
சமீபகாலமாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவரும் வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்திலும் வில்லியாக நடித்து வரவேற்பை பெற்றிருக்கிறார். ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்து இருக்கும் யசோதா படத்தில் சமந்தாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், கல்பிகா கணேஷ், மாதுரிமா, திவ்யா ஸ்ரீபதா, ப்ரியங்கா ஷர்மா போன்ற பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது.
மேலும் படிக்க | ரஜினிக்கு பாபா வில்லன் பிறந்தநாள் வாழ்த்து! என்ன கூறினார் தெரியுமா?
இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் 'யசோதா' ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி தளத்திலும் யசோதாவிற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கிறது. தங்களது விமர்சனங்கள் மூலம் படத்திற்கு அன்பையும் ஆதரவையும் ரசிகர்கள் இணையத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால், 'யசோதா' திரைப்படம் ப்ரைமின் வாட்ச் லிஸ்ட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மேலும் படிக்க | உங்களை சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக மாற்றும் ரஜினிகாந்தின் 10 படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ