ரஜினிக்கு பாபா வில்லன் பிறந்தநாள் வாழ்த்து! என்ன கூறினார் தெரியுமா?

ரஜினிகாந்த் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாபா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்தி ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 12, 2022, 11:56 AM IST
  • தற்போது பாபா திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
  • பாபா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
  • இன்று மாலை ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகிறது.
ரஜினிக்கு பாபா வில்லன் பிறந்தநாள் வாழ்த்து! என்ன கூறினார் தெரியுமா? title=

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாபா மறு வெளியீடு, ஜெயிலர் படத்தின் அப்டேட் என ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். 

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் பல்வேறு வழிமுறைகளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், பிறந்தநாள் கொண்டாடியும் வருகின்றனர். 

அந்த வகையில், 'பாபா' படத்தில் இப்போ ராமசாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அவர், பாபா மறுவெளியீட்டு குறித்தும் பேசியுள்ளார். 

குறிப்பாக, அவர் நடித்திருந்த இப்போ ராமசாமி பாணியில், இப்போ... இப்போ... இப்போ.. உடனே போய் பாபா படத்தை திரையரங்கில் பாருங்கள் என்றும் கூறியிருந்தார். ரஜினிக்கு அவர் படத்தின் வில்லன் நடிகர் வாழ்த்து கூறிய வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பாபா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல்... அப்செட்டில் ரஜினி?

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமானது அப்போது படுதோல்வியடைந்தது. ஆன்மீகத் தன்மையோடு வெளியான படத்தை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகாததும்தான் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் போர்க்கொடி தூக்க அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பணத்தையும் கொடுத்தார் ரஜினி. இப்படி பாபா படம் ரஜினிக்கு மறக்க முடியாது பல துன்ப நினைவுகளை கொடுத்திருக்கிறது.

இருப்பினும் பாபா படம் ரஜினிக்கு கனவு படம் என்றே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் காந்தாரா போன்ற ஆன்மீகமும் பேண்டஸியும் கலந்த படங்கள் சமீபத்தில் பெற்ற வரவேற்பை பார்த்து பாபாவை ரீ ரிலீஸ் செய்ய ரஜினி திட்டமிட்டார். இதற்காக ஏ.ஆர். ரஹ்மான் சில காட்சிகளுக்கு புதிதாக இசையமைக்க, ரஜினி சில காட்சிகளுக்கு புதிதாக டப்பிங் பேச படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டது. மேலும், படத்தின் க்ளைமேக்ஸும் மாற்றப்பட்டு, பாடலில் இருந்த சில வரிகளும் தூக்கப்பட்டன.

இப்படி பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு பாபா படம் நேற்று முன்தினம் (டிச. 10) திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் நாளில் 80 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | காவி உடையில் வாழும் வள்ளுவராக ரஜினி... யார் பார்த்த வேலை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News