சிவகார்த்திகேயனுக்கு சர்பிரைஸ் கொடுத்த யாஷ்
கேஜிஎப் படத்துக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயனுக்கு, நடிகர் யாஷ் சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.
ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான கேஜிஎப் 2 திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. மார்ச் மாதம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் சாதனைகளையும், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன்களையும் முறியடித்து வருகிறது. இதனால், திரும்பிய திசையெல்லாம் வாழ்த்து மழைகளில் கேஜிஎப் 2 படக்குழு நனைந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | விரைவில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்?
பீஸ்ட் படத்துக்கு போட்டியாக பார்க்கப்பட்ட கேஜிஎப்2, ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மறுபுறம் விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படத்தின் கதை, பழைய படங்களில் வந்த கதையை ரீமேக் செய்து எடுத்ததுபோல் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். இதனால், வெளியிட்டப்பட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் தியேட்டர்கள் காலியாக உள்ளன.
அதேநேரத்தில் கேஜிஎப் 2 திரைப்படம் தமிழகத்தில் 250 தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்குப் பிறகு கூடுதலாக 300 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வரும் வாரங்களில் தியேட்டர்களின் எண்ணிகை இன்னும் அதிகரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு நடிகர் சிவகார்த்திகேயன், டிவிட்டரில் யாஷூக்கு வாழ்த்து தெரவித்தார். அவருடைய வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த யாஷ், டாக்டர் படம் பார்த்ததாகவும், அந்தப் படம் சிறப்பாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் படிக்க | பீஸ்ட் படத்தை தான் போட வேண்டும் என திரையரங்கிற்கு மிரட்டலா? உண்மை என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR