பீஸ்ட் படத்தை தான் போட வேண்டும் என திரையரங்கிற்கு மிரட்டலா? உண்மை என்ன!

தமிழகத்தில் கேஜிஎப் 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2022, 06:52 PM IST
  • பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
  • தமிழகத்தில் அதிக திரையரங்கில் வெளியானது பீஸ்ட்.
  • வாரம் முழுவதிற்குமான டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளது.
பீஸ்ட் படத்தை தான் போட வேண்டும் என திரையரங்கிற்கு மிரட்டலா? உண்மை என்ன! title=

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியானது.  கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகி சாதனை படைத்தது.  அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 14-ம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியானது.  முதலில் 200 முதல் 250 திரையரங்குகள் மட்டுமே கேஜிஎப் 2 படத்திற்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்டு இருந்தது.  ஆனால், உலகம் முழுவதும் கேஜிஎப் 2 படம் பத்தாயிரம் திரையில் வெளியானது.

மேலும் படிக்க | விரைவில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்?

பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 என இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.  இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படம் இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றது.  ஒருதரப்பினர் நன்றாக இருக்கிறது எனவும், ஒரு தரப்பினர் நன்றாக இல்லை என்றும் தெரிவித்தனர்.  ஆனால் கேஜிஎப் 2 படம் அனைத்து தரப்பில் இருந்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.  நீண்ட நாட்கள் இருந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Vijay

தமிழகத்தில் கேஜிஎப் 2 படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க அனுமதி வழங்கப்படவில்லை,  பீஸ்ட் படத்தை தான் ஒளிபரப்ப வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு கூறப்படுவதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் இந்த பிரச்னை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அதில், "பீஸ்ட் படத்திற்கு திரையரங்குகள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதால், ஒரு வாரம் வரை அந்த ஒப்பந்தமே செல்லும்.  ஒரு வாரத்திற்கு பிறகே அடுத்த கட்ட மாற்றங்கள் குறித்து தெரியவரும்" என்று கூறியுள்ளார்.   

தமிழகத்தில் தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இரண்டு படங்களுக்கும் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது.  பீஸ்ட் படத்தை காட்டிலும் கேஜிஎப் 2 படத்திற்கு அதிக வரவேற்பு உள்ளதால், வரும் நாட்களில் இப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News