இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.கே.வெற்றிச்செல்வன் தற்போது ஜெய்யை வைத்து எண்ணித்துணிக என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதுல்யா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார். Rain Of Arrows Entertainment தயாரித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் மும்முரமாக நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் கடந்த 24ஆம் தேதி நடந்தது.அந்த விழாவில் வெற்றிச்செல்வனின் குருநாதரான வசந்த், க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி, டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், அடங்காதே பட இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி, இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஜெய், அதுல்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ட்ரெய்லரை பார்க்கும்போது படம் பக்கா க்ரைம் த்ரில்லர் ஆக்ஷன் பேக்கேஜாக உருவாகியிருக்கும் என பலர் கூறுகின்றனர். 



இந்நிலையில் படத்தின் இரண்டவது சிங்கிள் பாடலான  ‘என்னடியே என்னடியே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ் இசையமைப்பில் தொட்டி ஜெயா, வாகை சூட வா, 96 உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய கார்த்திக் நேத்தா பாடலை எழுதியுள்ளார்.



என்னடியே என்னடியே பிச்சு பிச்சு கோர்க்குற என்று தொடங்கும் பாடலில் பல வரிகள் கவனத்தை ஈர்க்கும்படியாக இருக்கின்றன. குறிப்பாக, “நிக்க வெச்சு றெக்க தச்சு வீசுற தாவுறேன் வானம் போதாம,கானல் மேலே பறவைய போல் அலைஞ்சேன் காதல் கொடுத்தாய் என் காதல் தாகம் தீர்ந்ததே, வெட்டிப்போட்ட விண்மீன்கள் இன்று சட்டைக் காம்பில் பூக்கின்றதே” போன்ற வரிகளில் கார்த்திக் நேத்த கவனம் ஈர்க்கிறார். 


 



சாம் சி.எஸ்ஸின் இசையும் சிறப்பாக அமைந்திருப்பதால் இந்தப் பாடல் ரசிகர்களின் விருப்பத்தை அதிகம் பெற்றுவருகிறது. எண்ணித்துணிக படமானது ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | முதன் முதலாக வெளியான யோகி பாபு மகனின் புகைப்படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ