ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இயக்குநாராகினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கினார். படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. கடைசியாக அவர் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். படம் போதிய வரவேற்பை பெறவில்லை.



இந்தச் சூழலில் அட்லீ ஷாரூக்கானை வைத்து இந்தியில் படம் ஒன்றை இயக்கிவருகிறார். இதில் ஷாரூக்கிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


மேலும் படிக்க | நெஞ்சை உருக்கும் 'அக்கா குருவி' - திரைப்பட விமர்சனம்


இந்நிலையில் அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவலை தற்போது யோகிபாபு ஒரு பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 



இப்படம் தொடர்பாக ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து இப்படத்தில் ஷாருக்கானுடன் நடிப்பதை உறுதி செய்துள்ளார். யோகிபாபு ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாரூக்குடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கங்கை அமரன் மன்னிப்பு கேட்க வேண்டும் - மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR