காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள  'தர்மபிரபு' படத்தின் டீசர், வெளியான 5 நாட்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள  'தர்மபிரபு' படத்தை  முத்துக்குமரன் இயக்கியுள்ளார்.  ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தர்மபிரபு திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகிபாபு. தவிர, தர்ம பிரபு படத்தின் மூலம், வசனகர்த்தாவாகவும் களம் இறங்கியிருக்கிறாராம் யோகி.


மேலும் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் யோகிபாபு எமதர்மனாக நடித்திருக்கும், இப்படத்தின் டீசர் கடந்த மார்ச் 30ம் தேதி வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது டீசர் வெளியான ஐந்து நாட்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது.