கடந்த சில ஆண்டுகளாக வயது அதிகமானோர் மட்டுமன்றி, இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அவர்களின் உயிரை பறித்து விடுகிறது. உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு, நடனமாடி கொண்டிருக்கும் போது மாரடைப்பு, நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பு என திடீர் உயிரிழப்புகள் அதிகமாக அரங்கேறி வருகின்றன. தற்போது, அதே போல 24 வயது இளம் நடிகை ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர், லக்‌ஷ்மிகா சஜ்ஜேவன். 24 வயதே ஆகும் இவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


லக்‌ஷ்மிகா சஜ்ஜேவன்:


மலையாள நடிகையான லக்‌ஷ்மிகா சஜ்ஜேவன், தனது நடிப்புக்கும் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரத்திற்கும் பெயர் போனவராக இருந்துள்ளார். இவர் நடித்த பஞ்சமி மற்றும் காக்கா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றன. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட சாதியினரின் கொடுமைகளை கூறும் கக்கா படத்தில் இடம் பெற்றிருந்த லக்‌ஷ்மிகாவின் கதாப்பாத்திரம் குறித்து பெரிதாக பேசப்பட்டது. எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி உணர்ந்து நடிக்கும் இவரது திறமையை பல பிரபல நடிகர்களும் பாராட்டி பேசியுள்ளனர். 


கேரளாவில் உள்ள கொச்சி நகரில் வளர்ந்த லக்‌ஷ்மிகா, துபாயில் உள்ள சார்ஜா நகரில் வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், திடீரென்று இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


மலையாள திரையுலகில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட யமண்டன் பிரேமகதா, பஞ்சவர்ணத்தத்தா, சவுதி வெள்ளக்கா, புழையம்மா, உயரே, ஒரு குட்டநாடன் வலைப்பதிவு, நித்யஹரித நாயகன் ஆகிய படங்களில் லக்‌ஷ்மிகா சஜ்ஜேவன் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பாரட்டு பெற்றுள்ளார். சிறு வேடங்களில் நடித்தாலும் மக்களின் மனங்களில் இடம் பெறும் அளவிற்கு நல்ல கதாப்பாத்திரங்களில் லக்‌ஷ்மிகா நடித்து வந்தார். இவரது இறப்பு, திரையுலகிற்கே பெரிய இழப்பு என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | அவள் பெயர் ரஜினி படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!


கடைசி பதிவு..
லக்‌ஷ்மிகா, 5 வாரங்களுக்கு முன்னர் கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சூரியன் உதயமாகும் புகைப்படத்தை போஸ்ட் செய்திருந்த அவர், “நம்பிக்கை - இருளில் இருந்தாலும் வெளிச்சம்” என எழுதியிருந்தார். இந்த பதிவிற்கு கீழ், அவரது ரசிகர்கள் “RIP” என கமெண்ட் செய்து வருகின்றனர். 


கர்பமாக இருந்த மலையாள நடிகை மரணம்!


சில வாரங்களுக்கு முன்னர், இதே போல ஒரு மலையாள நடிகை உயிரிழந்தார். 35 வயதான அந்த நடிகை, 8 மாத கர்பிணியாக இருந்தார். மருத்துவம் படித்திருந்த இவர் திருமணத்திற்கு முன்பு வரை சீரியலில் நடித்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி, மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர், 8 மாத கர்பிணியாக இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இவரது வயிற்றில் இருந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. மலையாள சினிமாவில் அதிகளவில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. 


மேலும் படிக்க | கோடிகளில் புரளும் நடிகர் சூரி! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ