பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்! அதுவும் 8 மாத கர்ப்பிணி! சிகிச்சையில் குழந்தை!

மலையாளத்தில் கருத்தமுத்து சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35 தான்

Written by - Bhuvaneshwari P S | Edited by - S.Karthikeyan | Last Updated : Nov 1, 2023, 06:38 PM IST
  • கேரள சின்னத்திரையில் சோகம்
  • பிரவசத்தின்போது வந்த மாரடைப்பு
  • திடீரென உயிரிழந்த சின்னத்திரை நடிகை
பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்! அதுவும் 8 மாத கர்ப்பிணி! சிகிச்சையில் குழந்தை! title=

மலையாளத்தில் கருத்தமுத்து சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35 தான். இவர் மருத்துவம் படித்திருந்தாலும் நடிப்பு மீதான ஆர்வத்தால் சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் இளம் வயதில் இவரது மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் கூடுதல் வேதனை என்னவென்றால் இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

இவரது மறைவுச் செய்தியை நடிகர் கிஷோர் சத்யா தனது முகநூலில் உறுதிபடுத்தியுள்ளார். நடிகை பிரியா இறந்ததும் உடனடியாக அவரது வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தைக்கு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறது. பிரியாவுக்கு எந்தவிதமான உடல்நலக்குறைவும் இதுவரை இருந்ததில்லை என்றும் வழக்கமான செக்-அப்பிற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியாவின் இறப்பை அடுத்து அவரது கணவரும், தாயும் உடைந்து போயுள்ளனர். 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் சீதா, ஷாக்கான ராம்!!

நடிகர் கிஷோர் சத்யா தனது முகநூல் பதிவில்,‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. 35 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது. விடை தெரியாத பல கேள்விகள் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’என உருக்கமாகப் பிரியாவின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ் ரசிகர்கள் தங்கள் இரங்கலை வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு எந்த சீரியல்களிலும் நடிக்காமல் இருந்த கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக தனது குழந்தைக்காக பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வந்துள்ளார். அதோடு வழக்கமான மருத்துவ செக்-அப்புகளையும் செய்து வந்துள்ளார். ஆனால் திடீரென அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது எப்படி என்பது தெரியவில்லை. மருத்துவர்கள் தரப்பிலும் எந்த விளக்கமும் இன்னும் அளிக்கப்படவில்லை. 

தற்போது சிகிச்சையில் இருக்கும் பிரியாவின் குழந்தை விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.

மேலும் படிக்க | மலை போல் கோடிகளை குவித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா.. கோடிகளை தாண்டும் சொத்து மதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News