TTF வாசனுக்கு வேண்டுகோள்விடுத்த இடிஷ் பிரசாந்த்!
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ள TTF வாசனுக்கும், 2கே கிட்ஸ்களுக்கும் யூடியூபர் இடிஷ் பிரஷாந்த் அறிவுரை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது யூடியூபர் TTF வாசன், 90ஸ் கிட்ஸ்களின் சாபத்திற்கும் உள்ளாகி இருக்கும் இவரை 2K கிட்ஸ்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். ஒரே ஒரு மீட் அப்பால் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படும் இந்த வாசனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து திட்டி தீர்த்து வரும் நிலையில், யூடியூபர் இடிஷ் பிரஷாந்த் இவருக்கும், 2K கிட்ஸ்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த தலைமுறையில் உள்ள 2K கிட்ஸ்கள் எதற்கும் பயப்படாமல் எல்லா தவறுகளையும் தைரியமாக செய்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும், அதிலும் அவர்கள் அதிகமாக பைக் ஓட்டுவதில் தான் மோகம் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | சினிமா to சீரியல் 5 புருஷன் காமெடி பிரியங்காவின் ரீ என்ட்ரி
இப்படி அவர்கள் இளம்வயதிலேயே பைக் மீது மோகம் கொண்டு இருப்பதால் பல அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு கூட நடந்துவிடுகிறது. பெற்றோர் பைக் வாங்கி கொடுக்காததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஒரு சிறுவன் பைக் ரேஸ் செய்யும்போது ஒருவரை மோதி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் என நாளுக்கு நாள் பலவித உயிரிழப்பு சம்பவங்கள் பைக் மூலம் நடந்து வருகின்றது. உங்களுக்கு பைக் வாங்கவேண்டும் என்கிற ஆசை இருந்தால் நீங்கள் உழைத்து சொந்த காசில் வாங்கவேண்டும், பெற்றோர் பணத்தில் வாங்குவது உங்களுக்கு பெருமை சேர்க்காது என்று யூடியூபர் இடிஷ் பிரஷாந்த் கூறியுள்ளார். மேலும் கூறுகையில் TTF வாசன் எவ்வளவோ நன்மைகளை செய்து வருகிறார் என்பது தெரியும், ஆனால் இவ்வளவு வேகத்தில் பைக்கை ஓட்டி இளம்வயதினரை தூண்டும் விதமாக செய்யும் செயலை செய்ய வேண்டாம்.
உங்களை பார்த்து நிறைய சிறார்கள் சீரழிய நேரிடும், எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறீர்கள் என்பதை உங்கள் ரசிகர்களுக்கு காமிக்காதீர்கள். உங்களை பின்தொடர்பவர்கள் எல்லாம் சிறுவயதினர் தான், அவர்களுக்கு போதுமான அளவு முதிர்ச்சி இருக்காது. அப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் நீங்கள் இப்படி செய்யும்போது பல சிறுவர்களும் பைக்கை இப்படி ஓட்டுவது தான் பெருமை என்று தவறாக நினைக்கிறார்கள். நீங்கள் தவறான முன் உதாரணமாக இருக்காதீர்கள். இது TTF வாசனுக்கு மட்டுமல்ல அனைத்து விதமான பைக்கர்களுக்கும் தான் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | சாமியார் ஆனார் திண்டுக்கல் லியோனி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR