சினிமா to சீரியல் 5 புருஷன் காமெடி பிரியங்காவின் ரீ என்ட்ரி

சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கிய பிரியங்கா, இப்போது சின்னத்திரையில் வில்லியாக அவதாரம் எடுத்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 6, 2022, 09:26 AM IST
  • 5 புருஷன் காமெடி பிரியங்காவின் ரீ என்ட்ரி
  • ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கிறார்
  • வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு பயணம்
சினிமா to சீரியல் 5 புருஷன் காமெடி பிரியங்காவின் ரீ என்ட்ரி title=

வெள்ளித்திரையில் காமெடி ரோலில் நடிக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து ஆல்டைம் பேவரைட் காமெடி சீன்களில் நடித்துள்ளார். அர்ஜூன் மற்றும் வடிவேலு கூட்டணியில் வந்த மருதமலை படத்தில் வடிவேலு காமெடி அனைத்தும் டிரேட்மார்ட் ஹைலைட்டாக இருக்கும். அந்தப் படத்தின் வெற்றிக்கே காமெடி தான் முக்கிய காரணமாக இருந்தது. அந்தப் படத்தில் வரும் காமெடிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், போலீஸாக இருக்கும் வடிவேலுவிடம் பிரியாங்கா பிராது கொடுக்க வரும் காமெடி தான்.

மேலும் படிக்க | சாமியார் ஆனார் திண்டுக்கல் லியோனி

5 கணவர்களும் வரிசையாக வந்து பிரியங்காவின் கணவராக வடிவேலுவிடம் அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரும் பிரியங்காவை தன்னுடன் அனுப்புமாறு கேட்பார்கள். கடைசியில் சீட்டு குலுக்கிப் போட்டு ஒரு கணவருடன் அனுப்பி வைப்பார். அடுத்தது, காதல் கடிதம் படத்தில் ’கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ என்ற ஈவ்டீசிங் காமெடியில் மாறுவேடத்தில் இருக்கும் போலீஸாக நடித்திருந்தார். அரசு படத்தில் ’பத்துமாமி’ காமெடியிலும் நடித்திருப்பார். இப்படி பல ஆல்டைம் பேவரைட் காமெடிகளில் நடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென வெள்ளித்திரையில் இருந்து திடீரென காணாமல் போனார். 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ சீரியலில் வில்லியாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, சினிமாவில் நடிப்பதும் சின்னத்திரையில் நடிப்பதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், வெள்ளித்திரையில் நான் காமெடி ரோலில் நடித்தேன். சின்னத்திரையில் வில்லியாக நடிக்கிறேன். இது மட்டும் தான் வித்தியாசம். 

வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. இருவருடனும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. என்ன கொடுப்பார்களோ அதை நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். முதலில் வடிவேலு சாரைக்கூட எனக்கு தெரியாது. யாருடன் நடிக்கிறேன் என்பது தெரியாமலேயே அவருடன் காமெடி சீன்களில் நடித்திருக்கிறேன். பின்னர் தான் அவர் யார் என தெரிந்து கொண்டேன் என கலகலப்பாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க | தளபதி - சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்லியிருக்கும் ஹரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News