விருமன் படத்தின் அடுத்த அப்டேட் - வெளியிட்டார் யுவன்
![விருமன் படத்தின் அடுத்த அப்டேட் - வெளியிட்டார் யுவன் விருமன் படத்தின் அடுத்த அப்டேட் - வெளியிட்டார் யுவன்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/08/02/240912-cats.jpg?itok=G6f-HfGc)
விருமன் படத்தில் இடம்பெற்றிருக்கும் மதுரவீரன் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்றுவந்தது.
'விருமன்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ஆகஸ்ட் மூன்றாம் தேதி ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முன்னதாக, படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா.
ஆனால் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'கொம்பன்' படத்திற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, அண்மையில் வெளியான இந்தப் படத்தின் "கஞ்சா பூ கண்ணால" பாடலின் ப்ரோமோவும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றிருக்கும் 'மதுர வீரன்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | பீஸ்ட் பாடல் செய்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ