எக்ஸாம் எழுத போக முடியாது என முரண்டு பிடிக்கும் ரத்னா! அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial Today Episode: ரத்னாவுக்காக தங்கைகளுடன் சென்னை கிளம்பிய ஷண்முகம், சௌந்தரபாண்டி செய்ய போகும் சூழ்ச்சி என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Anna Serial In Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா வெங்கடேஷை அவமானப்படுத்த ஷண்முகம் பரணியை சமாதானம் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரத்னா காலேஜ் பிரபஸர் ஆவதற்கான தேர்வு எழுத வேண்டும் என ஹால் டிக்கெட் வந்திருக்க ஷண்முகம் மற்றும் கனி என இருவரும் இதை படித்து விட்டு ரத்னவிடம் விஷயத்தை சொல்கின்றனர். ஆனால் ரத்னா எக்ஸாம் எழுத போக முடியாது. எங்க வீட்டில் அனுமதிக்க மாட்டாங்க என்று சொல்கிறாள்.
இதையடுத்து கனி அண்ணனுக்கு உடம்பு சரியில்ல என்று சொல்லி விட்டு வா என்று ஐடியா கொடுக்கிறாள், இவர்கள் சென்னை போகும் விஷயம் அறிந்த இசக்கி தானும் வருவதாக சொல்கிறாள். பாக்கியத்திடம் சொல்லி அனுமதியும் வாங்க இதை சௌந்தரபாண்டி ஒட்டு கேட்கிறார்.
ஷண்முகம் எதுக்கு தங்கச்சிகளை கூட்டிட்டு சென்னைக்கு போகணும், இதுல ஏதோ விஷயம் இருக்கு என யோசிக்க பாண்டியம்மா நீயும் பொண்டாட்டியுடன் போய் ஆதாரத்தோடு அவங்களை பிடிச்சு மாட்டி விடு என்று ஐடியா கொடுக்கிறாள். சௌந்தரபாண்டி எப்போதும் இல்லாத அளவிற்கு பாக்கியத்திடம் அன்பாக பேசுவது போல் பேசி சென்னை போயிட்டு வரலாம் என்று சொல்கிறார், ஆனால் பாக்கியம் அதெல்லாம் நான் வரல என்று வேண்டா வெறுப்பாக பேசுகிறாள்.
இதை தொடர்ந்து ஷண்முகம் மூன்று தங்கைகளுடன் சென்னை கிளம்ப தயாராக காரில் முன்பக்கம் எல்லாம் பாக்ஸாக இருக்க என்னவென்று கேட்க காலையில் சாப்பிட இட்லி, மதியம் சாப்பிட புளியோதரை என லிஸ்ட்டை அடுக்கி கொண்டே செல்ல தங்கைகள் கடுப்பாகின்றனர்.
அடுத்து தங்கைகள் பாட்டு போட சொல்ல ஷண்முகம் முதலில் முருகன் பாட்டை போட பிறகு சினிமா பாட்டு கேட்க பழைய பாடல்களை போட தங்கைகள் மனசிலாயோ பாடலை போட்டு ஆட்டம் பாட்டத்துடன் சென்னை கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ