Anna Zee Tamil Serial Today's Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் பரணி எடுக்கும் பால்குடத்தில் முத்துப்பாண்டி ஆசிடை கலந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் பல தொலைக்காட்சிகள் விதவிதமான கதையம்சங்கள் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பு வருகின்றன. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பிரபலமான சீரியல், அண்ணா (Anna Serial) தொடரில், இன்று (ஏப். 19) நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம். அதாவது, கோவிலில் ரத்னா பால் குடம் எடுக்க தயாராக பூசாரி பூஜை செய்ய எல்லோரையும் சன்னிதானத்திற்கு கூட்டிச்சென்ற நிலையில் கோவிலுக்கு வந்த நான்கு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து உண்டி கோலை வைத்து இது பானையை உடைத்து விடுகின்றனர். 


பிறகு பரணியும் பாக்கியமும் வெளியே வர பானை உடைந்து இருப்பதை பார்த்து இந்த விஷயம் ரத்னாவுக்கு தெரிய வேண்டாம் என்று பானையை மாற்றி வைக்கின்றனர். பிறகு ரத்னா பால்குடம் எடுக்கும் வேண்டுதலை நிறைவு செய்கிறாள். 


அடுத்ததாக அந்தப் பகுதி ஸ்கூல் பங்க்ஷனுக்கு சண்முகத்தை சிறப்பு விருந்தினராக அழைத்து பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். என்னால படிக்க முடியாம வெளியே அனுப்புன ஸ்கூலுக்கு நான் சிறப்பு விருந்தினராக போகப்போறேன் என்று சண்முகம் சந்தோஷப்படுகிறான். பரணி என்னால் தானே நீ படிக்க முடியாமல் போச்சு என்று பழைய விஷயத்தை சொல்கிறாள்.



மறுபக்கம் வாத்தியார் ஒருவர் சௌந்தரபாண்டியை சந்தித்து ஸ்கூல் நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையை கொடுக்க சண்முகத்தின் பெயருக்கு கீழே தனது பெயர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாத்தியாரை பிடித்து அடிக்க அவர் பத்திரிக்கையை நான் அடிக்கல பிரின்சிபல் தான் அடிச்சாரு. அவர்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிடுகிறார். 


மேலும் படிக்க | கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..


சௌந்தரபாண்டி சனியனுக்கு போன் போட்டு நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது அந்த சண்முகம் ஸ்கூல் பங்க்ஷன்க்கு வரக்கூடாது என்று சொல்கிறார். சனியன் சண்முகத்துடன் நீ ஸ்கூல் பங்க்சனுக்கு போகாத என்று சொல்ல அவன் ஏன் என்று கேட்கிற இந்த டிரஸ்ல ஸ்கூலுக்கு போன நல்லா இருக்காது என்று சொல்ல ஏன் அந்த சௌந்தர பாண்டி நான் வரக்கூடாதுன்னு சொன்னானா என்று சண்முகம் கேட்க சனியன் ஷாக் ஆகிறான். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ