Zee Tamil Anna Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் ஸ்கூல் மேடையில் இங்கிலீஷில் பேச வந்து இருப்பது ஷண்முகம் தான் என சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் பல தொலைக்காட்சிகள் விதவிதமான கதையம்சங்கள் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பு வருகின்றன. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பிரபலமான சீரியல், அண்ணா (Anna Serial) தொடரில், இன்று (ஏப். 23) நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.அதாவது, இங்கிலீஷில் பேசி அசத்தும் ஷண்முகம் நான் என்னைக்குமே வேட்டி சட்டையை தான் போடுவேன், அது தான் நம்முடைய அடையாளம். வேட்டி சட்டையை காட்டினாலே உங்கள் ஷண்முகம் தான் என பேச எல்லாரும் ஜோராக கைதட்டி உற்சாகப்படுத்த சௌந்தரபாண்டி கடுப்பாகிறார். சனியனும் கையை தட்டி நம்ம ஷண்முகமா இப்படி என்று ஆச்சரியப்பட்டு பேச சௌந்தரபாண்டி அடித்து துரத்துகிறார். அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று சவால் விடுகிறார். 


அடுத்து ஷண்முகம் வீட்டிற்கு கிளம்பி வர வீட்டில் வைகுண்டம் என் புள்ளையை நானே படிக்க வைக்காமல் விட்டுட்டேன், அவனும் பிடிச்சிருந்தா இன்னைக்கு மாதிரி எப்பவும் கோர்ட் சூட் போட்டு வேலைக்கு போய் இருப்பான் என்று கண் கலங்க பரணி ஆறுதல் சொல்கிறாள். 


மேலும் படிக்க | த்ரிஷாவுக்கே tough கொடுக்கும் பாட்டி! அப்படிப்போடு பாடலுக்கு அப்படியொரு குத்து..



பிறகு ஷண்முகம் வீட்டிற்கு வர கனியும் ரத்னாவும் ஸ்கூலில் கிடைத்த பாராட்டுகளை பற்றி சொல்கின்றனர், ரத்னா பரணியிடம் கண்டிப்பா உங்க அப்பா சும்மா இருக்க மாட்டாரு, ஏதாவது செய்வார் என்று சொல்கிறாள். அதற்கேற்றார் போல் சௌந்தரபாண்டி ஸ்கூல் ஓனருக்கு போன் செய்து ரத்னாவை வேலையில் இருந்து தூக்க சொல்ல அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். 


உடனே முத்துப்பாண்டி ஸ்கூல் ஓனருக்கு போனை போட்டு நீ அவளை வேலையில் இருந்து எடுக்கலனா ஸ்கூல்ல கஞ்சா விற்கறீங்கனு பொய் கேஸ் போட்டு ஸ்கூல் மானத்தை வாங்கிடுவேன் என்று மிரட்ட பிரின்சிபால் ரத்னாவை வேலையில் இருந்து தூக்குகிறார், முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் நாங்க தான் டி தூக்க சொன்னோம் என்று பேச ரத்னா அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறாள். 


விஷயம் அறியும் ஷண்முகம் கோபப்பட்டு அரிவாளை எடுத்து கொண்டு கிளம்ப பரணி தடுத்து நிறுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ