20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Ghilli Re Release TN Box Office Collection : கில்லி திரைப்படம், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்திருக்கின்றனர்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 21, 2024, 07:18 PM IST
  • கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ்
  • முதல் நாளிலேயே சக்கை போடு போட்ட வசூல்
  • தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா?
20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?  title=

Ghilli Re Release TN Box Office Collection :  விஜய் நடிப்பில் 2004 ஆண்டு வெளியான படம், கில்லி. 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான போதே ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த இப்படம், தற்போது ரீ-ரிலீஸிலும் ரெக்கார்டுகளை குவித்து வருகிறது. 

கில்லி திரைப்படம்:

தெலுங்கில் ‘ஒக்கடு’ எனும் பெயரில் 2003ஆம் ஆண்டு ஒரு படம் வெளியானது. இதில், நடிகர் மகேஷ் பாபு ஹீராேவாக நடிக்க அவருக்கு ஜாேடியாக பூமிகா நடித்திருந்தார். இப்படத்தின் தமிழ் ரீ-மேக்தான் ‘கில்லி’ என்ற பெயரில் தமிழில் உருவானது. இதில் விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜாேடியாக த்ரிஷா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ்தான் இந்த இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கில் இப்படம் மெகா ஹிட் அடித்தது போலவே தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. மகேஷ் பாபுவே, ஒரு நேர்காணலில் தெலுங்கை விட தமிழில் கில்லி படம் நன்றாக இருப்பதாகவும் விஜய் தன்னை விட நல்ல நடிகர் என்றும் கூறியிருந்தார். தெலுங்கில் இப்படத்தை குணசேகர் இயக்க, தமிழில் தரணி இயக்கியிருந்தார். 

20 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ்:

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக பழைய படங்கள், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. ஆளவந்தான், முத்து, வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில், தற்போது கில்லி படமும் வெளியானது. இப்படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ரிலீஸ் செய்யப்பட்டது. இதுவரை ரீ-ரிலீஸ் ஆன எந்த படங்களுக்கும் இல்லாத அளவிற்கு, கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தியேட்டரில் குவிந்த கூட்டம்..

கில்லி படம், சுமார் 600 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள், தியேட்டருக்கு வெளியில் டிக்கெட் வாங்குவதற்காகவும், உள்நுழைவதற்காகவும் பெரும் வரிசையில் திரண்டு நின்று கொண்டிருந்தனர். தியேட்டர், படம் பார்க்கும் இடம் போல அல்லாமல் ரசிகர்கள் பலர் எழுந்து நடனமாடும் இசை நிகழ்ச்சியாக மாறியது. அப்படிப்போடு பாடலுக்கெல்லாம் ஒரு சிலர் அந்தக்குத்து குத்தினர். அது மட்டுமன்றி, ரீ-ரிலீஸை இன்னொரு முறை பார்ப்பதற்கு கூட ஒரு ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?

மொத்த வசூல்..

கில்லி ரீ-ரிலீஸின் முதல் நாளிலேயே, படம் சுமார் 10 கோடியை தாண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இலங்கை என வெளிநாடுகளிலும் கில்லி ரீ-ரிலீஸிற்கு பன்மடங்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த நாட்டில் உள்ள தமிழ் ரசிகர்கள், பாடல்களுக்கு எழுந்து நின்று நடனமாடும் வீடியாேக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? 

நிச்சயமாக, தமிழகத்தில்தான் கில்லி படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இதுவரை, இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.4 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த வசூலை ரீ-ரிலீஸான எந்த படங்களும் செய்ததில்லை எனவும் கில்லி படம் சாதனை படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இனி அப்படியொரு விஜய்யை பார்க்கவே முடியாதே..

கில்லி படத்தில் நடித்த போதுதான் நடிகர் விஜய் ‘மாஸ்’ ஹீராேவாக வளர்ந்து கொண்டிருந்த சமயம், அப்போது காட்சிக்கு காட்சி பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் பல காட்சிகளில் தனது க்யூட் ரியாக்ஷன்களின் மூலம் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார். இளம் வயதினருக்கே உடைய குறும்புத்தனமும், குழந்தை தனமும் கில்லி விஜய்யிடம் இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியாகும் அவரது படங்களில் அப்படிப்பட்ட எதுவும் தென்படுவதில்லை. மாஸ் சீன்களில் மட்டுமே நடிக்கிறார். இன்னும் இரண்டு படங்களுக்கு பிறகு அரசியலில் இறங்கும் அவரை, இனி திரையில் பார்க்காத நிலையும் வந்து விடும். இதை நினைத்து பல ரசிகர்கள் இப்போதே கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் படிக்க | ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News