தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். மாறுபட்ட கதைக்களத்துடன் சீரியல், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மக்கள் மத்தியில் தொடர்ந்து தனித்துவமான இடத்தை பிடித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் இந்த சேனல் ஆண்டுதோறும் குடும்ப விருதுகள் விழா மூலமாக ஜீ தமிழ் நட்சத்திரங்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குடும்ப விருதுகள் விழா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.


மேலும் படிக்க | ‘இறுகப்பற்று’ படம் ஓடிடியில் ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது..?


இந்த வருட ஆரம்பத்தில் கடந்த வருடத்திற்கான விருது விழாவினை நடத்தி மக்களையும் ஜீ தமிழ் நட்சத்திரங்களை மகிழ செய்தது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி தீபாவளி தினத்தில் ஒளிபரப்பாக உள்ளது, இதற்கான நாமினேஷன் தொடங்கி மக்கள் மத்தியில் பெருவாரியான ஓட்டுக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த குடும்ப விருதுகள் விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அட்டகாசமான ப்ரோமோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ப்ரோமோ வீடியோவை பார்க்கும் போதே இந்த வருடம் விருதுகளை வெல்ல போவது யார் யார் என்ற எதிர்ப்பார்ப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சியினை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டு களிக்க தயாராகுங்கள்.


மேலும் படிக்க | ‘லியோ’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ