அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. மாஸ் என்ட்ரியுடன் ஷாக் கொடுத்த ஷண்முகம்

Anna Serial Update As on 15th September 2023: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. மாஸ் என்ட்ரியுடன் ஷாக் கொடுத்த ஷண்முகம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2023, 02:42 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
  • சூடாமணியையும் அவளது குடும்பத்தையும் காலி பண்ண வேண்டும் என்று துடிக்கும் கேரளா பேமிலி.
அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. மாஸ் என்ட்ரியுடன் ஷாக் கொடுத்த ஷண்முகம் title=

Anna Serial Update As on 15th September 2023: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி குடும்பம் மண்டபத்தில் வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, அண்ணா. இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நடிகர் செந்தில்குமார் ஷன்முகம் எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்றைய அண்ணா சீரியல் எபிசோடில், சனியன் மண்டப அலங்காரங்களை பார்த்து செமயா இருக்கு என்று பாராட்டி பேச சௌந்தரபாண்டி கல்யாணம்னா சும்மாவா அது கௌரவம் என்று சொல்கிறார், எல்லாம் சரி தான் ஐயா ஆனால் உங்க பொண்ணை யாரோ ஒரு டாக்டருக்கு கட்டி தரீங்க என்று சொல்ல பரணி உன் வேலையை மட்டும் பாரு என்று அவனை ஆப் ஆக்குகிறாள். 

அதனை தொடர்ந்து சௌந்தரபாண்டியின் போட்டோவை பெரிதாக போட்டு பேனர் வைத்திருக்க அதை பார்த்து அவர் எதுக்குடா இதெல்லாம் என்று கேட்க சனியனும் முத்துபாண்டியும் நாங்க இல்லை என்று சொல்கின்றனர். செல்வம் என்ட்ரி கொடுத்து எல்லாம் எங்க ஏற்பாடு தான் சொல்ல பிளானில் எதுவும் மாற்றமில்லை என்று சொல்ல செல்வம் அவர் காலில் விழ இப்படி எதுவும் செய்து காட்டி கொடுக்காதே என்று சொல்கிறார். 

மேலும் படிக்க | பாசமிகு அண்ணா கொடுக்கும் ஷாக்! ரத்னாவை தூக்க வந்த ரவுடிகளுக்கு அதிர்ச்சி

இங்கே சூடாமணியையும் அவளது குடும்பத்தையும் காலி பண்ண வேண்டும் என்று துடிக்கும் கேரளா பேமிலி சௌந்தரபாண்டி பொண்ணு கல்யாணத்துக்கு சூடாமணி வெளியே வருவா, அவளை கொன்னுடனும் என பிளான் போடுகின்றனர். ஷண்முகம் வீட்டில் எல்லாரும் கல்யாணத்துக்கு கிளம்ப ரத்னா நான் காலைல வரேன், இப்போ வரல என்று சொல்ல வைகுண்டம் அவளுக்கு துணையாக வீட்டில் இருக்க ஷண்முகம் போலீஸ்காரர்களிடம் சந்தேகத்துடன் சொல்லி விட்டு வருகிறாம். 

அடுத்து கல்யாண மண்டபத்துக்கு வெளியே வெடி சத்தம் கேட்க மாப்பிளை வீட்டினர் வந்து விட்டதாக நினைத்து சௌந்தரபாண்டி வெளியே வர ஷண்முக மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ‘அண்ணா’ சீரியல்.

அண்ணா  சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 2 நாளில் 200 கோடியை தாண்டிய ஜவான்..! அசல் வசூல் நிலவரம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News