வசமாக சிக்கிய தாரா-சாட்சியாக மாறிய சூர்யாவின் நண்பன்..மாரி சீரியலில் பெரிய ட்விஸ்ட்!
Maari Serial Update Today: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தாரா மாரியை வீட்டுக்கு அழைக்க மாரி அதற்கு மறுப்பு தெரிவித்த பிறகு சீமந்தத்திற்கு அழைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வீட்டு பத்திரத்தை வைத்து பணத்தை வாங்கும் ஸ்ரீஜா அதை கொண்டு போய் டூப்ளிகேட் ஸ்ரீஜாவிடம் கொடுத்து அடிக்கடி இப்படி பணம் கேட்டுகிட்டே இருக்காதீங்க உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நான் கண்டிப்பாக கொடுத்து விடுவேன் என்று சொல்கிறாள். மேலும் மீது இருக்கும் பணத்தை கையில் குழந்தையை கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளுமாறு சொல்கிறாள்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா..! வெயிட் பார்டிதான் போல
ஒரு பக்கம் சூர்யாவின் நண்பன் அவன் கொடுத்த போட்டோவை வைத்து அதில் இருந்த பெண்மணி யார் என்பதை கண்டுபிடித்து விடுகிறான். சரி இதை சூர்யாவுக்கு தெரியப்படுத்தலாம் என்று முடிவெடுத்து போன் பண்ணலாம் என்று போனை எடுக்க நைட்டு இரண்டு மணி ஆகிவிட்டது என்பதால் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாகி விடுகிறார்.
மறுநாள் காலையில் கோவிலில் வளைகாப்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க இங்கிருந்து பாட்டி முதலில் மாரியை வந்து உட்கார சொல்கிறார். பிறகு ஹாசினி அதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா என இருவரும் வந்து அமர்கின்றனர்.
சூர்யா மாரிக்கும் அரவிந்த் ஹாசினிக்கும் மற்றும் தினேஷ் ஸ்ரீஜாவுக்கும் என செய்ய வேண்டிய சடங்குகளை செய்து பங்க்ஷனை தொடங்கி வைக்கின்றனர். இறுதியாக வளையல் போடப் போகும்போது பாட்டி ஒருவர் வலையலை உடையாம போடணும் அப்படி உடைந்தால் குழந்தைக்கு ஆபத்து என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ