சந்தியா ராகம்: புவனேஷ்வரிக்கு ரகுராம் கொடுத்த வாக்கு.. காதலை சொன்ன கார்த்திகை, வீட்டை விட்டு வெளியேறும் தனம்
Sandhya Ragam Serial Update Today : புவனேஷ்வரிக்கு ரகுராம் கொடுத்த வாக்கு.. காதலை சொன்ன கார்த்திகை, வீட்டை விட்டு வெளியேறும் தனம் - சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டே
Sandhya Ragam Serial Update Today : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் மாயாவை பற்றி முடிவெடுக்கும் உரிமை எனக்கு இல்ல என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரகுராம் மாயாவை பற்றி சொல்லிய விஷயத்தை கேட்ட மாயாவுக்கு அவர் மீதான மரியாதை அதிகமாகிறது, பிறகு ஜானகி அப்போ நீங்க மாயாவை கொடுக்க சம்மதம் சொல்ல மாட்டிங்களா என்று கேட்க நிச்சயம் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறார்.
ஆனால் மறுபக்கம் வில்லிகள் டீம் ஒன்று சேர்ந்து இந்த குடும்பம் உனக்காக என்னவெல்லாம் செய்திருக்க, அதையெல்லாம் மறந்துடாத.. ரகுராம் வாக்கு கொடுத்து இருக்காரு. அவருடைய கௌரவம் உன்னுடைய முடிவில் தான் இருக்கு.. இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு என்று சொல்ல மாயா இவர்கள் பேசுவதை கேட்டு கண் கலங்குகிறாள்.
பிறகு புவனேஸ்வரி வீட்டிற்கு வர ரகுராம் என்ன சொல்ல போகிறார் என்று எல்லாரும் எதிர்பார்க்க மாயா இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி. அவளோட வாழ்க்கையை பத்தி முடிவெடுக்கிற உரிமை எனக்கு இல்ல, நீ என்னுடைய பொண்ணு தனத்தை கேட்டு இருந்தா கூட நான் மறுக்காமல் சம்மதம் சொல்லி இருப்பேன் என்று சொல்ல தனம் ஷாக்காக புவனேஷ்வரி எனக்கு உன் குடும்பத்துல சம்மந்தம் பண்ணனும்னு தான் ஆசை, உன் பொண்ணை கேட்டா தர மாட்டேன்னு நினைச்சு தான் மாயாவை கேட்டேன் என்று சொல்கிறாள்.
பிறகு தனத்தை கூப்பிட்டு பக்கத்தில் நிற்க வைத்து உன் பொண்ணு என் அண்ணன் வீட்டு மருமகளா வரதுல எனக்கு முழு சந்தோசம் என்று சொல்ல மாயா தன்னை நினைத்து நிம்மதி அடைகிறாள். தனம் அப்பா கொடுத்த வாக்கால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். அடுத்து தனம் காலேஜில் நின்று கண் கலங்கி கொண்டிருக்க கார்த்திக் அவளை கூப்பிட இவள் திரும்பாமல் இருக்கிறாள்.
பிறகு கார்த்திக் தனத்தின் முன்பு வந்து நின்று ஐ லவ் யூ என்று சொல்ல தனம் எதுவும் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறாள், இதுக்கு தானே ஆசைப்பட்ட, இப்போ ஒன்னும் சொல்ல மாட்டுற என்று கார்த்திக் கேட்க ரகுராம் கொடுத்த வாக்கு பற்றி சொல்ல கார்த்திக் அது உங்க அப்பா உன்னை கேட்காமல் கொடுத்தது, அதை பத்தி எனக்கு கவலை இல்லை. நீ உன் அப்பா கிட்ட நம்ம காதலை பற்றி பேசு என்று சொல்லி அனுப்பி வைக்க தனமும் அப்பாவிடம் ஆர்வமாக காதலை பற்றி பேச வருகிறாள்.
இந்த நேரத்தில் ரகுராம் ஜானகியிடம் தனம் என்னுடைய வார்த்தையை மீற மாட்டா என்று நம்பிக்கை எனக்கு இருக்கு என்று பேச இதை கேட்கும் தனம் காதலை பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறாள். பிறகு ரூமுக்குள் அழுது கொண்டிருக்க இதை பார்த்த ஷாரு கார்த்திக்கு போன் செய்து தனம் உங்க மேல உயிரா இருக்கா.. நீங்க இல்லாமல் அவளால் இருக்க முடியாது.. பேசாமல் நீங்க ஊரை விட்டு ஓடிடுங்க. நீங்க சொல்ற நேரத்துக்கு தனம் தயாரா இருப்பா என்று சொல்ல தனமும் வேறு வழியின்றி இதுக்கு சம்மதம் தெரிவித்து துணிகளை பேக்கப் செய்கிறாள்.
கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?
கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ் - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ