அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் அமுதா எக்ஸாம் எழுதி முடிக்க ரிசல்ட் வர உள்ள நிலையில் இன்றைய எபிசோடில் அமுதா கோவிலில் சாமி முன்னாடி நின்று கொண்டு “இன்னைக்கு result வரப்போகுது நீதான் கடவுளே எனக்கு துணையா இருக்கணும்” என்று வேண்டிக் கொண்டிருக்கிறாள். 


மேலும் படிக்க | தன்னைவிட 6 வயது கம்மியான ஹீரோவுக்கு ஜோடியாகும் திரிஷா!


அப்பொழுது உமா அங்கே வந்து அமுதாவிடம் “நீ fail ஆகிட்ட” என்று சொல்ல அமுதா அதை பார்த்து ஷாக் ஆகிறாள். அதன் பிறகு அமுதா நியூஸ் பேப்பரில் நம்பர் தேட நம்பர் இல்லாமல் இருக்கிறது. 


உமா “உன் பேப்பர கரெக்ட் பண்ற டீச்சருக்கு பணம் கொடுத்து உன்னை fail பண்ணது நான்தான்” என்று சொல்ல இதைக் கேட்ட அமுதா அதிர்ச்சியில் உறைகிறாள்‌. உமா அமுதாவை கிண்டல் பண்ணிட்டு போக
அமுதா feel பண்ணிக் கொண்டே வீட்டுக்கு வருகிறாள்‌.  


அனைவரும் ரிசல்ட் தெரிந்து கோபத்தில் இருக்க அன்னம் அமுதாவிடம் “எல்லாம் போச்சா உன்னால முடியாதுன்னு எனக்கு தெரியும்” என்று சொல்ல அமுதா வருத்தம் அடைகிறாள். 


அடுத்ததாக செந்தில் “இவ்வளவு தூரம் போனதே பெரிய விஷயம் பரவால்ல விடு” என்று சொல்ல வடிவேல் “mark எல்லாம் பாருங்க 2, 4 , அஞ்சுன்னு, போன் நம்பர் மாதிரி இருக்கு” என்று சொல்லி கிண்டல் பண்ணுகிறான்‌. 


மேலும் வடிவேல் “அம்மா... அமுதா எக்ஸாம்ல fail ஆகிட்டா அவளை கூட்டிட்டு போக மெண்டல் ஹாஸ்பிடலுக்கு phone பண்ணிட்டேன்.. வண்டி வந்துட்டு இருக்கு” என்று சொல்கிறான். செந்தில் வேண்டாம் என்று தடுக்க, வடிவேல் “யாரும் தடுக்கக்கூடாது அமுதா தானே சவால் விட்டா” என்று சொல்கிறான். இதனால் செந்தில், வடிவேல் இடையே சின்ன வாக்குவாதம் ஏற்படுகிறது.


அதை தொடர்ந்து வண்டி வரும் சைரன் சத்தம் கேட்க வடிவேல் “வண்டி வந்துருச்சு” என்று சொல்ல வீட்டுக்கு வெளியே ஜட்ஜ் வரும் கவர்மெண்ட் வண்டி வந்து நிற்கிறது. ஜட்ஜ் வீட்டுக்குள் வந்து அமுதாவிடம் என்ன ஆச்சு பாஸ் ஆகிட்டியா என்று கேட்க அமுதா அனைவரும் அமுதா fail ஆன விஷயத்தை சொல்கின்றனர். 


திரும்பவும் ஜட்ஜ் விசாரிக்க உமா செய்த வேலைகளை போட்டு உடைக்கிறாள். ஜட்ஜ் “நீ எழுதுனா examல உனக்கு நம்பிக்கை இருக்கா” என்று கேட்க அமுதா ”நான் நல்லா தான் எழுதி இருக்கேன் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொல்ல ஜட்ஜ் “உன்னை நம்பி ஒரு ரிஸ்க் எடுக்கலாமா” என்று கேட்கிறார். அமுதா என்னவென்று கேட்க Judge நாளைக்கு காலைல 10 மணிக்கு கோர்ட்டுக்கு வந்துரு என்று சொல்லிவிட்டு போகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | தனுஷின் 50வது படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்.. ஷூட்டிங் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ