அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் வடிவேலு காப்பை திருடிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்த பார்க்கலாம் வாங்க. அதாவது, இளங்கோ வடிவேலுவை காப்பை திருடிவிட்டு எங்க மேல பழி போடுறியா என அவனை அடிக்க சிதம்பரம் இளங்கோவை அடிக்கிறார். அதைக் கண்ட அன்னலட்சுமி நிறுத்துங்க என்று சத்தமிட்டு என் பையனை எதுக்காக அடிக்கிறீங்க அவன் என்ன தப்பு பண்ணுனான்னு சொல்லுங்க என்று கேட்கிறாள். மேலும் என் பையன் காப்பை வாங்கி என் கிட்ட குடுத்தான், அது தான் இது என்ற விசயத்தையும் சொல்கிறாள்.


மேலும் படிக்க | Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்!


அதனை தொடர்ந்து செல்வா போலீசை வரச் சொல்ல போலீஸ் மண்டபத்துக்குள் சோதனை செய்ய அப்போது இன்னொரு காப்பு கிடைக்கிறது. இதனால் அன்னம் கோபத்துடன் அனைவரையும் திட்டி வடிவேலு திருடவில்லை என சொல்கிறாள்.


பிறகு செல்வராஜிடம் குழந்தை ஒன்று வந்து செல்போனில் உள்ள வீடியோவை காட்ட, அதில் வடிவேலு திருடியது தெரிய வருகிறது. இதனால் செல்வா சிதம்பரத்திடம் திருடியது வடிவேலு தான் என சொல்லி விடலாம்னு சொல்ல அமுதா சபையில் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறாள்.


அதனை தொடர்ந்து செல்வராஜ் தனது ஆட்களிடம் நகைக் கடைக்காரரை தூக்கி வரச் சொல்லி அவனை அடித்து கேட்க, கடைக்காரர் உண்மையை சொல்கிறான். இது எதுவும் தெரியாமல் அன்னலட்சுமி வடிவேலு மீது திருட்டு பழி போட்டதற்காக அமுதா மன்னிப்பு கேக்க வேண்டும் என சொல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | பாகுபலி நடிகருக்கு வில்லனாக கமல்? 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா..!


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ