சீதா ராமன் அப்டேட்: ஒரே இளநீரில் ரெண்டு ஸ்ட்ரா.. ராமுடன் சீதா ரொமான்ஸ், டென்ஷனில் மகா குடும்பம்
Seetha Raman Today`s Episode Update: ஒரே இளநீரில் ரெண்டு ஸ்ட்ரா.. ராமுடன் சீதா ரொமான்ஸ், டென்ஷனில் மகா குடும்பம் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராம் மற்றும் சீதா என இருவரும் மகாபலிபுரம் கிளம்பிய நிலையில் இங்கே வீட்டில் ராமை எப்படி திரும்ப வர வைப்பது என மகாலட்சுமி யோசிக்கிறாள்.
மகாபல்லிபுரம் செல்லும் சீதா, ராமன்
ஜீப்பில் ராமுடன் செல்லும் சீதா அவனிடம் பேச தொடங்குகிறாள். நான் பேசுனா தான் நீங்க பேசுவீங்களா பாஸ், இல்லனா பேச மாட்டிங்களா பாஸ் என அவள் கேட்க ராம் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்கிறான். பிறகு சீதா நான் ஜீப் ஒட்டாவா என கேட்க ராம் உனக்கு ஓட்ட தெரியுமா என கேட்க, அவள் நான் 10-வது படிக்கும் போதே ஓட்ட கத்துக்கிட்டேன் என கூறுகிறாள்.
பிறகு ஜீப்பை வேகமாக ஒட்டி ராமை மிரள வைக்கிறாள் சீதா.
இதற்கிடையில் மகாலட்சுமி, அர்ச்சனா என வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்க சீதா இருவரது போனையும் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாள். இதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் டென்ஷனாக மீராவும் துரையும் அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தானே, அவங்க வெளிய போகுறதுல உங்களுக்கு என்ன கவலை என கேட்க ராமின் தங்கைகள் ஓவராக பேச மீரா அவர்களை திட்டுகிறாள்.
மரத்தில் ஜீப்பை மோதிய ராம்
அடுத்து சீதா நீங்க உங்க சித்தி சொன்னா மட்டும் தான் கேப்பீங்களா? என கேட்க அவன் நீ சொன்னாலும் கேட்பேன் என்று சொல்கிறான். உடனே சீதா அப்படினா ஜீப்பை அந்த மரத்தின் மீது மோதுங்க என சொல்ல ராம் வேகமாக மோத போக சீதா பயந்து அவனை கட்டி கொள்கிறாள். நீ இல்லனா கண்டிப்பா மோதி இருப்பேன் என ராம் சொல்ல சீதா சாந்தோஷமடைகிறாள்.
அடுத்து சீதா தனக்கு பூ வேண்டும் என சொல்லி ஒரு பூக்கடை அருகே நிறுத்தி பூ வாங்கி தலையில் வைத்து விட சொல்ல ராமும் வைத்து விடுகிறான்.
இதை பூக்கார பெண்ணை வைத்து போட்டோ எடுத்து வீட்டில் எல்லாருக்கும் அனுப்புகிறாள் சீதா.
வீட்டுக்கு போட்டோ அனுப்பும் சீதா
அதோடு இல்லாமல் இளநீர் ஒன்று வாங்கி இருவரும் ஒரே இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிப்பதையும் போட்டோ எடுத்து அனைவர்க்கும் அனுப்ப இதை பார்த்து எல்லாரும் டென்ஷன் ஆகின்றனர். சீதா அனுப்பிய போட்டோக்களை மகா பார்த்தால் என்ன ஆகும் என பயப்படுகின்றனர்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா... உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ