‘மன்னவன் வந்தானடி’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்
‘மன்னவன் வந்தானடி’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் முதல் முறையாக நடிக்கும் படம் தான் ‘மன்னவன் வந்தானடி’. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆதிதி போஹன்கர் நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. மேலும் இப்படத்தில் சந்தானத்தின் தோற்றம், நடிப்பு உட்பட அனைத்தும் முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும் என தகவல் கிடைத்தது. பஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது இது உண்மை என்று தோன்றுகிறது.
காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது. செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்.