பாரிஸ்: மேல் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். சில வருடங்கள் கழித்து அந்த பெண் தனக்கு பிரெஞ்ச் குடியுரிமை வேண்டும் என பிரெஞ்ச் நாட்டில் விண்ணப்பித்தார். 


இதையடுத்து அந்த பெண்ணுக்கு குடியுரிமை கொடுப்பதற்கான விழாவில் கலந்து கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது. தென்கிழக்கு இஸ்ரே பிராந்தியத்தில் நடந்த அவ்விழாவுக்கு அந்த இஸ்லாமிய பெண் சென்றுள்ளார். 


இந்நிலையில், அந்த விழாவில் அங்கிருந்த பிரெஞ்ச் உயர் அதிகாரிகள் பிரெஞ்ச் குடியுரிமை பெற வாழ்த்துகள் என அந்த பெண்ணுக்கு கைகொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் அவர்களுக்கு கைகுலுக்க மறுத்துள்ளார். அதுமட்டும் இன்றி எங்கள் மத வழக்கப்படி மற்றவர்களுக்கு கைகொடுப்பதில்லை என்றும் கூறினார். 


இந்த வழக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பிரெஞ்ச் அதிகாரிகள் உடனே கைகொடுக்க மறுப்பவர்கள் எங்கள் நாட்டுப் பிரஜையாக இருக்க முடியாது எனக் கூறி அவரது குடியுரிமை வழங்க மறுத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த நிகழ்வுக்கு கடந்த ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றமும் அதையே கூறியுள்ளது. நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்தார். அங்கும் அதையே நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.