ரஷ்யா, இந்தியா நாடுகளின் கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரு அருகே தும்கூரில் இந்த போர் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை பெற்று வருகின்றது. அதன் ஒரு கட்டமாக ரஷ்யாவிடம் இருந்து 200 கமோவ் ரக அதிநவீன ஹெலிகாப்டர்களை (கேஏ-226டி) வாங்க இந்தியா முடிவெடுத்தது. 


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி சென்றபோது, இதுதொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


இந்த ஒப்பந்தத்தின் படி ‘ரஷ்ய ஹெலிகாப்டர்ஸ்’ நிறுவனமும் இந்தியாவின் ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’ நிறுவனமும் இணைந்து கமோவ் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன.  ஒப்பந்தத்தின் படி மொத்தமுள்ள 200 ஹெலிகாப்டர்களில் முதல் கட்டமாக 60 ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்கும். மீதமுள்ள 140 ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிகிறது.


இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள ஹெலிகாப்டர்களை தயாரிக்க பெங்களூரு அருகில் உள்ள தும்கூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் தயாரிப்பது மட்டுமன்றி அதற்கான தொழில்நுட்பங்களையும் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. 


தற்போது சீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்களை இந்தியா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.