Drone Attack: ஆரம்கோ எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹூதி! கவலை தரும் பின்னணி
சவுதி மீது மீண்டும் ஹூதிக்கள் தாக்குதல்! அறிக்கை வெளியிட்ட ஹூதி ராணுவ செய்தித் தொடர்பாளர்...
ஜெட்டாவில் (2022, மார்ச் 25) நேற்று நிகழ்ந்த மிகப் பெரிய தீ விபத்துக்கு காரணமான தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று பேசிய ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா, ஜெட்டாவில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் ஆலையை யேமனின் ஹூதிகள் தாக்கியதாக தெரிவித்தார்.
ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் ஒரு பகுதியாக, நகரத்தில் உள்ள ஃபார்முலா ஒன் மைதானத்திற்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வானில் பிரம்மாண்டமான அளவில் புகை மேகங்கள் எழுந்தன.
"நாங்கள் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பல தாக்குதல்களை நடத்தினோம்," என்று ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, "ஜெட்டா மற்றும் ரியாத்தில் உள்ள முக்கிய நிறுவல்கள் உட்பட பல தாக்குதல்களை நடத்தினோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 செப்டம்பரில் ஏமனின் தலைநகரான சனாவை கைப்பற்றிய ஈரான் ஆதரவு ஹவுதிகளுக்கு எதிராக சவுதி அரேபியா (Saudi Arabia) ஏற்படுத்திய கூட்டணி இன்னும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
2015 இல் ஏமன் நாட்டின் போரில் நுழைந்த ஐக்கிய ராச்சியம், சனா (Sanaa) நகரில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது, சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது, இந்தத் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் படிக்க | அடங்காத வடகொரியா.! மீண்டும் ஆபத்தான ஏவுகணை சோதனை
அந்தப் போரில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் மோர்டார்களை சவுதி அரேபியா ஏவியதை, ஹவுதிக்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நார்த் ஜித்தா பல்க் பிளாண்ட், (North Jiddah Bulk Plant) நகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு தென்கிழக்கே அமைந்துள்ளது, இது மெக்காவிற்கு (Mecca pilgrimage) செல்லும் இஸ்லாமிய யாத்ரீகர்களுக்கான முக்கியமான மையமாகும். அங்கு பற்றி எரியும் தீயின் வீடியோக்கள் பற்றிய ஆன்லைனில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டாவது முறையாக சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், யு.ஏ.இயை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் கவலைகளை அதிகரிக்கின்றன.
வாகனங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை குறிவைத்து தஹ்ரான் நகரில் தாக்குதல் நடத்தியதை சவுதி அரசு தொலைக்காட்சி ஒப்புக்கொண்டது. சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் யேமன் எல்லைக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தை குறிவைத்து மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பிரபாகரனால் முடியாததை ராஜபக்ஷே செய்துவிட்டார்
சவூதியின் வான் பாதுகாப்புப் படையினர் ஜசான் துறைமுக நகரத்தை நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ராக்கெட்டை இடைமறித்து அழித்துள்ளனர், இது மின்சார விநியோக ஆலையில் "வரையறுக்கப்பட்ட" தீயை ஏற்படுத்தியது என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியா, கடந்த மூன்று வாரங்களாக தீவிரமடைந்துள்ள ஹூதி தாக்குதல்களின் விளைவாக உலக சந்தைகளுக்கு எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு பொறுப்பேற்க மாட்டோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஹூதிகள், இத்துடன் இரண்டு முறை வடக்கு ஜித்தா ஆலையை குரூஸ் ஏவுகணை மூலம் குறிவைத்துள்ளனர். ஒரு தாக்குதல் நவம்பர் 2020 இல் வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தத் தாக்குதலின் போது, 500,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட தொட்டியில் இருந்த டீசல் பற்றி எரிந்தது.
யேமனின் போரை ஆய்வு செய்யும் ஐ.நா நிபுணர் குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி. 20220 தாக்குதலுக்குப் பிறகு, அந்த தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு அராம்கோவிற்கு $1.5 மில்லியன் செலவானது.
மேலும் படிக்க | அதிபர் புதினின் ரகசிய காதலியை நாடுகடத்த 61,000 பேர் மனு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR