வட கரோலினா இளம்பெண் ஒருவரை, அவர் அணிந்திருந்த ஆடை பொருத்தமற்று இருப்பாக கூறி பள்ளி வாகனத்தில் இருந்து இரக்கிவிடப் பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகிங்கா தேவிஸ், வட கரோலினாவை சேர்ந்த 16 வயது பெண்ணான இவர் ஹூக் கண்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றார். கடந்த வெள்ளி அன்று இவர் தனது பள்ளி வாகனத்தில் பயணித்தப் போது அவர் அணிந்திருந்த ஆடை பொருத்துமற்று இருப்பதாக கூறி அவரை பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இரக்கிவிடப்பட்டுள்ளார்.


இதுகுறித்து அவரின் தாயார் இந்தியா மெடில்டன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மகிங்கா தேவிஸ் சம்பவ நாள் அன்று மாலை 4 மணியளவில் தன் தாயருக்கு நடந்த விவரங்களை கூறி தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வருமாறு தெரிவித்துள்ளார்.


எனினும் தனக்கு இருந்த பணிசுமை காரணமாக அவரால் பள்ளிக்கு விரைந்து செல்ல முடியவில்லை. சுமார் 5.45 மணியளவிலேயே அவர் பள்ளியை அடைந்துள்ளார். இந்த இரண்டு மணி நேரங்களும் தேவிஸ் யாரும் இல்ல இடத்தில் தனியா அங்கும் இங்குமாய் ஆதரவற்ற திரிந்துள்ளார்.



இந்த காட்சிகளை அவரது தாயர் முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.