தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கிடையே சுமூகமான சூழல் உருவானதை அடுத்து தென்கொரியாவிற்கு நிகரான நேர மண்டலத்தினை வட கொரியா மாற்றியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகியது. அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்து தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது. 


இதனையடுத்து இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தைக்கு பின்னர் இருநாட்டு அதிபரும் கடந்த வாரம் சந்தித்தனர். இச்சந்திப்பின் மூலம் 60 ஆண்டாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது.


இதனையடுத்து, இருநாட்டு ஒற்றுமையினை வெளிப்படுத்தும் வகையில் தென்கொரியாவின் நேர மண்டலத்தினை வடகொரியா பின்தொடர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெள்ளியன்று உள்ளூர் நேரப்படி 23.30 மணியளவில் வடகொரியாவின் அனைத்து கடிகாரங்களும் 30 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டன.


முன்னதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை விட வட கொரியா அரை மணி நேரம் பின்நோக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது!