இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்து இருந்தாலும் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அங்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளை தேடி அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று இலங்கை வவுனியா மாவட்டத்திலிருந்து இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் இரண்டு குழந்தைகள் என ஆறு பேர் நேற்று இரவு எட்டு மணிக்கு பிளாஸ்டிக் படகில் மன்னார் பகுதியில் இருந்து 4 லட்ச ரூபாய் கொடுத்து புறப்பட்டு, இன்று காலை 7 மணி அளவில் தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டிற்கு வந்துள்ளனர்.


மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; அடுத்தது சீனாவில் வலையில் சிக்கிய பாகிஸ்தானா...


இந்நிலையில் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலோர காவல் படைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படை, மணல் திட்டில் தவித்த ஆறு பேரையும் உடனடியாக ஹோவர் கிராப்ட் கப்பல் மூலமாக மீட்டனர். தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு அழைத்து வரப்பட்டு கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் இந்திய கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர்.


இதனை அடுத்து அழைத்து வரப்பட்ட இலங்கைத் தமிழர்கள் அனைவரும் மண்டபம் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு பின் மண்டபம் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து இதுவரை 109 பேர் வாழ்வாதாரம் தேடி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அங்கு பொருளாதார நெருக்கடி நிலையினால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டு வருகின்றன. மக்கள் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.  ஆத்திரமடைந்த மக்கள், அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் ஆகியவற்றை சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...


மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR