இங்கிலாந்தின் பிரதமராகிறார் ரிஷி சுனக்! இங்கிலாந்தை ஆளப்போகும் வம்சாவளி இந்தியர்
RishiSunak: பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார். ஒரு காலத்தில் இந்தியாவை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்தை ஆளப்போகும் முதல் வம்சாவளி இந்தியர் ரிஷி சுனக்...
புதுடெல்லி: பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார். ஒரு காலத்தில் இந்தியாவை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்தை ஆளப்போகும் முதல் வம்சாவளி இந்தியர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில், இங்கிலாந்தின் பிரதமராகத் தயார் என்று ரிஷி சுனக் அறிவித்திருந்தார். தன்னை முறைப்படி பிரதமர் வேட்பாளராக அறிவித்த அவர்ர், 'பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும்' என்று தனது விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக, வேட்பாளராக களம் இறங்குவதை அறிவித்த ரிஷி சுனக், இங்கிலாந்து சிறந்த நாடு "ஆனால் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்" என்றும், அதனால்தான் "கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அடுத்த பிரதமராகவும் வேட்பாளராக நிற்கிறேன்" என்று சுனக் கூறியிருந்தார்.
தற்போது ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராவது முடிவாகிவிட்டது. இந்த செய்தியை ஏ.என்.ஐ நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) பதவி விலகும் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸுக்குப் பிறகு பதவியேற்கிறார். தேசம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால், இங்கிலாந்தை வழிநடத்த அவர் தயாராகிவிட்டார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது, கட்சியின் தலைவர்கள் பலரும் கைத்தட்டி வரவேற்ற வீடியோவை, கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ளது.
42 வயதான சுனக், இந்தியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு
இங்கிலாந்தில் வசிக்கும் இந்து வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார குடும்பங்களில் ரிஷி சுனக்கின் குடும்பமும் ஒன்று. இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனக்கின் தந்தை யாஷ்வீர் சுனக் தேசிய சுகாதார சேவை பொது பயிற்சியாளர் ஆவார். ரிஷி சுனக்கின் தாய், உஷா சுனக் மருந்துக் கடை நடத்தி வந்தார்.
ரிஷி சுனக், எப்போது பதவியேற்பார் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகவுள்ளன.
மேலும் படிக்க | UK Election: பரபரப்பான இறுதி கட்ட தேர்தல்; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ