கனடா உயர் படிப்புக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடா பல்கலைக்கழகங்களில் கலவி கற்க செல்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியை இவை வழங்குவது, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம். வலுவான உள்கட்டமைப்பு, அதிநவீன பாடத்திட்டங்கள், பரந்து விரிந்த வளாகங்கள் என கண்டா கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் சிறந்த தேர்வாக திகழ்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கனடா மாணவர் விசா மற்ற நாடுகள் வழங்கும் மாணவர் விசாவிலிருந்து வேறுபட்டது. அது உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விசாவை மூலம் ஆனால் தங்குவதற்கோ, உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளவோ முடியாது. அதற்கு, உங்கள் விசாவுடன் உங்களுக்கு படிப்பு அனுமதி (Study Permit) தேவைப்படும். எளிமையாகச் சொன்னால், மாணவர் விசா என்பது நாட்டிற்குள் நுழைவதற்கான அங்கீகாரம். படிப்பு அனுமதி நீங்கள் அங்கே தங்கி படிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.


மேலும் படிக்க | UAE: எண்ட்ரி விசா வழிமுறைகளில் மாற்றங்கள், விவரம் இதோ


மாணவர் படிப்பு அனுமதி கோரும் பத்திரத்தில், மாணவர் படிக்க விரும்புவதற்கான நோக்கம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் படிக்க விரும்புவதற்கான காரணம், நீங்கள் ஏன் இங்கு வர விரும்பிகிறீர்கள், எந்தப் பாடநெறியில் படிக்கிறீர்கள், கால அளவு என்ன, வேலையின் அடிப்படையில் இருக்கும் ஏதேனும் கட்டுப்பாடுகள், ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மாணவர் விசாவிற்கு நீங்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.


உங்கள் படிப்பு அனுமதி அங்கீகரிக்கப்பட்டால், நீங்கள் ஒரு பார்வையாளர் விசா அல்லது மின்னணு பயண அங்கீகாரம் (eTA) ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு கனடாவிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்குகிறது.


தகவல்களை உறுதிப்படுத்த, கீழே உள்ள வலைதளத்தை காணலாம்


https://www.cic.gc.ca/english/visit/visas.asp


கனடாவில் கனடா மாணவர் விசாவில் உள்ள ஒரு வெளிநாட்டவர், தன்னை சார்ந்திருக்கும் மனைவி அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகளை கனடாவிற்கு அழைத்து வரலாம். வாழ்க்கைத் துணை ஒரு திறந்த பணி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கலாம், வாழ்க்கை துணையின் படிப்பு விசா செல்லுபடியாகும் காலத்திற்கு வேலை செய்யலாம். இருப்பினும், மனைவி/கணவன் கனடாவில் படிக்க விரும்பினால், அவர்கள் தனி படிப்பு விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ