சீன அரசுக்கு காணி வழங்கும் விடயத்தை ஆவணம் மூலம் உறுதிப்படுத்துங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்ட நிலையில், அதனை வழங்க முடியும் எனவும், தங்களிடம் கையளிக்க முடியாது எனவும் சிறீதரன் கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் இடம்பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரணைமடு குளத்தின் பின் பகுதியிலும், யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும் சீனாவிற்கு காணி வழங்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் வெளியிட்டிருந்தார்.


இது குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுத்து வந்த நிலையில், வடமராட்சி கிழக்கில் 200 ஏக்கர் காணி வழங்கப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் உண்டா என சிறீதரனிடம் வினவினார்.


200 அல்ல 700 ஏக்கர் என்றும், அதற்கான கோரிக்கை ஆளுநரிடம் விடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரணைமடு குளத்திற்கு அண்மித்த பகுதியிலுமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி


அதற்கான ஆவணம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் அந்த ஆவணத்தை நாளை யாழ்ப்பாணத்தில் தர முடியுமா என அமைச்சர் வினவினார். அதனை உங்களிடம் தர முடியாது என சிறீதரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வெகு காலத்திற்குக் முன்னரே தெரிவித்திருந்தது.


பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணி உள்ளது. அந்த பகுதியில் சீன நிறுவனத்திற்கும், சிங்கள முதலாளிகளிற்கும், இலங்கை அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி கிடைத்ததாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்திருந்தது.


மேலும் படிக்க | போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?


தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்து சீனாவிற்கும், சிங்களவர்களுக்கும் கொடுக்க முன்னாயத்த நடவடிக்கைக்ளை அரசு எடுத்துள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குற்றம் சாட்டிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தேசிய காணி அபிவிருத்திசபைக்கு சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன. அந்த காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களிற்கு வழங்காமல் அதை சிங்கள முதலாளிகளிற்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான். இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். என்றும், வடக்கிற்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது என்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்திருந்தது. 


பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களிற்கு காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வர்களிற்கு காணி வழங்காமல் சீனா, சிங்களவர்களிற்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவந்த நிலையில், இரணைமடு குளத்தின் பின் பகுதியிலும், யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும் சீனாவிற்கு காணி வழங்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் வெளியிட்டிருந்தது முக்கியத்துவம் பெறுகிறது.


மேலும் படிக்க | இணைய பயன்பாட்டில் பிற நகரங்களையும் உலகையும் பின்னுக்குத் தள்ளும் இந்திய கிராமங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ