Golden Visa: முதலீட்டை ஈர்த்த கோல்டன் விசாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐரோப்பிய நாடு!
No More Golden Visa: உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போர்ச்சுகல் நாடு, கோல்டன் விசா கொடுக்கும் திட்டத்தை கைவிட்டது. இதன் பின்னணி என்ன?
End Card To Golden Visa: கோல்டன் விசா கொடுப்பதை நிறுத்துவதாக போர்ச்சுகல் நாடு அறிவித்தது, உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டில் ரியல் எஸ்டேட்டில் முதலீடுகள் செய்யும் மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட்களை வழங்கும் போர்ச்சுகலின் கோல்டன் விசா திட்டம் இத்துடன் முடிவுக்கு வருகிறது.
போர்ச்சுகலின் கோல்டன் விசா
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேராதவர்கள், போர்ச்சுகலில் முதலீடு செய்தால், அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட்களை வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்த போர்ச்சுகல், தற்போது அந்தத் திட்டத்திற்கு எண்ட் கார்டு போட்டுவிட்டது.
போர்ச்சுகலின் முதலீட்டு ஈர்ப்புத் திட்டம்
போர்ச்சுகலின் பிரத்யேக கோல்டன் விசா திட்டம் அறிவிக்கப்பட்டதும், அதன் தலைநகரான லிஸ்பன் மற்றும் பிற நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 350,000 முதல் 600,000 யூரோக்கள் வரை முதலீடு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Neal Mohan: சுந்தர்பிச்சையை தொடரும் நீல் மோகன்! யூடியூப் புதிய CEO
வெளிநாட்டினரை கவர்ந்த கோல்டன் விசா
மடோனா போன்ற பல பணக்கார வெளிநாட்டினரைக் கவர்ந்த போர்ச்சுகலின் "கோல்டன் விசா" ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு மட்டுமே என்று அந்நாடு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதான எதிர்பார்புக்களால், 2022ஆம் அண்டு நவம்பரில் ஐரோப்பிய யூனியனை சேராதவர்களின் முதலீடுகள் 40 சதவீதம் உயர்ந்தன.
மூதலீட்டின் மூலம் குடியுரிமை
இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களையும் அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டா எதிர்கொண்டார். ரெசிடென்சி பை இன்வெஸ்ட்மென்ட் புரோகிராம் (Residency by Investment Program) என்ற திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக தீவிரமாக பரிசீலித்து வந்த நிலையில், தற்போது அந்தா விசா இனிமேல் கொடுக்கப்படாது என்று போர்ச்சுகல் அறிவித்துவிட்டது. கூறினார்.
மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ
ஏழைநாடுகளின் திட்டம்
மேற்கு ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல், கோல்டன் விசா திட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, போர்ச்சுகல் Airbnbs மற்றும் பிற குறுகிய கால விடுமுறை வாடகைகளுக்கான புதிய உரிமங்களையும் தடை செய்வதாக அறிவித்தது. வெளிநாட்டு ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள், தங்களிடம் இருந்த கோல்டன் விசாவை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களை பயன்படுத்துவதற்கு தடை இல்லை.
உச்சத்தை தொட்ட வாடகை
போர்ச்சுகலில் வீடு மற்றும் வாடகை விலைகள் உயர்ந்துள்ளன, மேலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கடந்த ஆண்டு மாதத்திற்கு 1000 யூரோக்களுக்கும் குறைவாகவே சம்பாதித்தனர். லிஸ்பனில் மட்டும், 2022ல் வாடகை விலை 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
போர்ச்சுகல் பொருளாதாரம்
போர்ச்சுகல் சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது. கோல்டன் விசா போன்ற கொள்கைகள் பணக்கார வெளிநாட்டினரை நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவித்த அதே சமயத்தில், உள்ளூர்வாசிகள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது அல்லது வாங்குவது கடினம் என்ற நிலை நிலவியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ