NRI News: நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள்

NRI Investment: சிறந்த எதிர்காலத்தைத் தேடி தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2022, 02:01 PM IST
  • பணி ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஆனியுட்டி பிளான், அதாவது வருடாந்திரத் திட்டம் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றது.
  • மூலதன உத்தரவாதத் திட்டங்கள் மிதமான அளவிலான ஆபத்தைக் கையாளக்கூடிய நபர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
  • இந்த புதிய திட்டங்களில் சில 7.2 சதவீதம் வரை வருமானத்தை வழங்குகின்றன.
NRI News: நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள் title=

ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை, பெரும்பாலான மக்கள் ஓய்வூதியத் திட்டத்தை பெரும்பாலும் புறக்கணிக்கின்றனர். இருப்பினும், நிதி நிலையில் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்ய, ஓய்வுக்கு பின்னரான நிதி ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக,  சிறந்த எதிர்காலத்தைத் தேடி தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அரசாங்கம் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, இந்தியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கான மையமாக மாறும் பாதையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில்,  வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணி ஓய்வுக்கு பிறகான தங்கள் எதிர்காலத்தை  முன்கூட்டியே திட்டமிட அவர்களுக்கு தேர்வு செய்வதற்கு பல திட்டங்கள் உள்ளன. என்ஆர்ஐக்கள் தங்கள் பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பாதுகாப்பதற்குப் பலனளிக்கும் சில திட்டங்களின் விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

வருடாந்திர திட்டங்கள்

இன்சூரன்ஸ்-குமுலேட்டிவ்-முதலீட்டுத் திட்டங்களில் பணி ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஆனியுட்டி பிளான், அதாவது வருடாந்திரத் திட்டம் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றது. இது மிகவும் பிரபலமான ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது முதலீட்டாளரின் விருப்பத்தைப் பொறுத்து மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான கட்டணங்களை வழங்குகிறது. 

மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ 

பணி ஓய்வுக்குப் பிறகு, ஒரு அமைதியான நிலையான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க, இந்த திட்டங்கள் மூலோபாய ரீதியாக உங்கள் மூலதனத்தை நிர்வகித்து, நிலையான வருமானத்தைத் திருப்பிச் செலுத்துகின்றன.

ஆனுவிட்டி திட்டங்களில் டிஃபர்ட் மற்றும் உடனடி திட்டங்கள் முதலீட்டாளர்கள் அடிக்கடி தேர்ந்தெடுக்கும் இரண்டு வகையான வருடாந்திர திட்டங்கள் ஆகும். டிஃபர்ட் திட்டங்கள் உங்கள் கார்பஸை மேலும் வலுவாக்கி,  பிற்கால வாழ்க்கையில் பெரும் தொகையைப் பெற உதவுகின்றன. 

உடனடி வருடாந்திரத் திட்டம், நீங்கள் உடனடியாக ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவதற்கு உதவுகிறது. துரதிஷ்டவசமாக பாலிசிதாரர் இறந்தால், இந்த திட்டத்தில், பாலிசிதாரர் இந்த திட்டத்தை வாங்கப் பயன்படுத்திய தொகையை பாதுகாத்து, அதை உங்கள் நாமினிக்கு திருப்பித் தரும் நன்மை உள்ளது. இந்த பாலிசியை 18 வயதில் வாங்கலாம் மற்றும் இது 80 அல்லது 99 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

மூலதன உத்தரவாதத் திட்டம் (கேப்பிடல் கேரண்டி பிளான்)

மூலதன உத்தரவாதத் திட்டங்கள் மிதமான அளவிலான ஆபத்தைக் கையாளக்கூடிய நபர்களுக்கு ஏற்றதாக இருக்கும். 50 முதல் 60 சதவிகிதம் வரை கடன் நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் அசல் தொகையை இழப்பிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், பங்குகளில் சில பகுதியை முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் சந்தை லாபத்திலிருந்து பயனடைய இந்தத் திட்டம் உதவுகிறது. வரியற்ற வருமானம் மற்றும் வரி நன்மைகள் ஆகியவை காப்பீடு மற்றும் முதலீட்டு தயாரிப்புகளின் கலவையால் வழங்கப்படுகின்றன. இது உறுதியான ஓய்வூதிய நிதியை உருவாக்க உதவுகிறது. இது மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்திர கொடுப்பனவுகளைத் தேர்வுசெய்ய அனுமதிப்பதால், இது ஒரு மிகச்சிறந்த மாற்றாக அமையும். 

உத்தரவாதமான ரிடர்ண் திட்டம் (கேரண்டீட் ரிடர்ண் பிளான்)

இந்தத் திட்டம் பாரம்பரிய முதலீட்டு வகையைச் சேர்ந்தது. இந்த திட்டங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் ஏற்ற திட்டமாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவை நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. குறிப்பாக இன்றைய நிலையற்ற பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இவை நேர்த்தியான முதலீட்டு திட்டங்களாக செயல்படுகின்றன. 

வாங்கும் நேரத்தில் லாப விகிதத்தை அமைப்பதன் மூலம் முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு எளிதாக இவற்றில் ஈடுபடலாம். இந்த புதிய திட்டங்களில் சில 7.2 சதவீதம் வரை வருமானத்தை வழங்குகின்றன. இது FD-கள் அல்லது PPF-கள் போன்ற தற்போதைய பிரபலமான முதலீட்டு திட்டங்களை விட அதிகமாகும். கூடுதலாக, இந்தியாவில் குடியிருப்பு அல்லாத வெளி கணக்குகளை வைத்திருக்கும் என்ஆர்ஐ-களுக்கு இந்த உத்தி இன்னும் லாபகரமானது. ஏனெனில் இதன் மூலம் அவர்கள் ஜிஎஸ்டி ரீஃபண்டுக்கு தகுதி பெறுகின்றனர்.

மேலும் படிக்க | NRI வீட்டில் வாடகைக்கு உள்ளீர்களா? இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News