Viral Video of a Cat: விலங்குகள், குறிப்பாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. எப்போதும் நமக்கு ஆச்சர்யங்களையும், ஆனந்த அதிர்ச்சிகளையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது என்றால் மிகையில்லை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. வீட்டில் வளர்க்கும் போது அவை வீட்டில் ஒருவராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் சூட்டிகையான பூனை ஒன்று, செய்யும் வேலை தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் பூனை வீடியோவில், மூன்று பூனைகளின் மீது லேசர் ஒளி படும் படி ஒரு மனிதன் விளையாடுவதைக் காணலாம். மூன்று பூனைகளும் விளையாட்டுத்தனமாக லேசர் ஒளியைப் பிடிக்க முயலுவதையும் காணலாம். அதில் ஒரு பூனை மட்டும், மிகவும் ஆர்வமாக, லேசர் ஒளியை பிடிக்க, ஒளியை தொடர்ந்து தருணத்தில், அதைப் பின் தொடர்ந்து எந்த சிரமமும் இல்லாமல் சுவரின் மீது ஏறிச் செல்கிறது. இருப்பினும், மற்ற இரண்டு பூனைகளும், இது எப்படி சாத்தியம் என சந்தேகத்துடன் பூனையைப் பார்த்துக் கொண்டிருந்தன. மிக உயரமான சுவரில், பூனை மிக லாவகமாக ஏறுவதையும், வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோவில் காணலாம். பூனை அதிக உயரம் தாண்டி குதிப்பதையும் லாவகமாக உயரம் தாண்டுவதையும் பலர் பார்த்திருப்பார்கள். ஆனால், செங்குட்த்ஹான சுவரில் பூனை ஏறுவது உண்மையில் ஆச்சர்யத்தை அளிக்கிறது.


வைரலாகும் ஸ்பைடர்மேன் பூனை வீடியோ



பூனைகளும் மிகவும் புத்திசாலியான உயிரினங்கள். பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன என்றும் கூறுகின்றனர். இந்த வைரல் வீடியோ @why we should have cat_ என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப் பட்டுள்ளது. இந்த வீடியோ சுமார் பல மில்லியன் பார்வைகளையும் பல ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: அடக் கொடுமையே... பேக்ட்ரியில இப்படித் தான் ஐஸ் கட்டி தயாரிக்கறாங்களா...!


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ