இந்திய மாணவர் சுட்டுக் கொலை! சந்தேக நபரை வலைவீசித் தேடும் அமெரிக்க போலீஸ்
Student Killed In USA: அமெரிக்காவில் உயர்கல்வி கற்க சென்ற சாயேஷ் வீரா என்ற மாணவரை ஒருவர் சுட்டுக் கொன்றார். சந்தேக நபரின் புகைப்படத்தை போலீசார் டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்
அமெரிக்காவின் ஓஹியோவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கவலையை அதிகரித்துள்ளது. 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொன்றதாக போலீசார் சந்தேகபப்டும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சாயேஷ் வீரா, ஒஹியோவில் முதுகலை பட்டப்படிப்பு படித்துவந்தார்.
அமெரிக்காவில் உயர்கல்வி கற்க வந்த சாயேஷ், ஓஹியோ மாநிலத்தின் கொலம்பஸ் பிரிவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரியும் போது, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை அறிக்கை ஒன்றில் பாதிக்கப்பட்டவரை அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் கூறியதாவது: "ஏப்ரல் 20, 2023 அன்று, நள்ளிரவு 12:50 மணிக்கு, கொலம்பஸ் காவல்துறை அதிகாரிகள் 1000 பிளாக் டபிள்யூ. பிராட் செயின்ட் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வந்தவுடன், துப்பாக்கிக் காயத்தால் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை அதிகாரிகள் பார்த்தனர், அவர் சையேஷ் வீரா என அடையாளம் காணப்பட்டார்."
கொலம்பஸ் தீயணைப்பு வீரர்கள் அவரை ஆபத்தான நிலையில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் அதிகாலை 1.27 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பேஸ்புக், இன்ஸ்டாவிற்கும் வருகிறது கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி!
சாயேஷ் வீராவின் உடலை ஊருக்கு கொண்டு செல்வதற்கு ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த இளைஞர் சாயேஷ் தனது முதுகலை படிப்பை முடிக்க இன்னும் 10 நாட்களே உள்ளது.
மத்திய வர்க்கக் குடும்பத்தை சேர்ந்த சாயேஷ் வீரா, மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற முதல் நபர் என்று கூறப்படுகிறது. அவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரின் படத்தை வெளியிட்ட கொலம்பஸ் காவல்துறை, அந்த நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியைக் நாடியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது..
மேலும் படிக்க | AI சாட்ஜிபிடி தொடர்பான சர்வதேச விதிகளை உருவாக்க முயற்சிக்கும் ஜப்பான் உச்சிமாநாடு
ட்விட்டரில், "இந்த சந்தேக நபரைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள்" என்ற செய்தியுடன் காவல் துறையினர், சந்தேக நபரின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
இந்த சந்தேக நபரைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள்
ஏப்ரல் 20, 2023 அன்று நடந்த ஒரு கொடிய துப்பாக்கிச் சூடு தொடர்பான இந்த நபரை அடையாளம் காண உதவி தேவை. சாயேஷ் வீரா, 24, W. பிராட் செயின்ட் 1000 பிளாக்கில் அமைந்துள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"ஏப்ரல் 20, 2023 அன்று நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு தொடர்பான இந்த நபரை அடையாளம் காண கொலை துப்பறியும் நபர்கள் உதவி கேட்கிறார்கள். W. பிராட் செயின்ட் டிப்பின் 1000 பிளாக்கில் அமைந்துள்ள எரிவாயு நிலையத்தில் 24 வயதான சாயேஷ் வீரா சுட்டுக் கொல்லப்பட்டார். 614-645-4730 ஐ அழைக்கவும்." என்று டிவிட்டரில் போலீசார் உதவி கோரியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ