வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதாவது என்ஆர்ஐ, இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானவர்கள். உலகில் இந்தியாவை பிரதிபலிக்கும் பிம்பங்களாக அவர்கள் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது தாய்நாடான இந்தியாவுக்கு பல விதங்களில் பங்களிக்கிறார்கள். இதில் பொருளாதார பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
நாட்டிற்கு அவர்கள் செய்யும், ரெமிடென்ஸ், அதாவது நாட்டிற்கு பணம் அனுப்புவதன் மூலம் அவர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்கிறார்கள். என்ஆர்ஐ -கள் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பும் பணம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கிறது. மேலும் இந்தியாவின் மேக்ரோ-பொருளாதார மட்டத்தில் ஸ்திரத்தன்மையை இது உறுதி செய்கிறது. இதன் காரணமாக, நாட்டில் நுகர்வு மற்றும் முதலீடுகளும் ஊக்கமடைகின்றன.
ரெமிடென்ஸில் புதிய சாதனை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில், 2022 காலண்டர் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த மொத்த பணம் 107.5 பில்லியன் டாலர்களை எட்டியது என்று கூறினார். இது உலக வங்கியின் மதிப்பீட்டு கணிப்பை விட 7.5 பில்லியன் டாலர்கள் அதிகமாகும். இதன் காரணமாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு இப்போது 600 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் 600 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. எக்ஸ்சேஞ்ச் ரேட் நிலைத்தன்மையை அடைந்துள்ளது. மேலும் ரெமிடன்ஸ் ஃப்ளோ ஒரு சாதனை அளவில் உள்ளது. கையிருப்பு ஜூன் 2021 இல் முதல் முறையாக 600 டாலர் பில்லியனைத் தாண்டியது. செப்டம்பர் 2021 இல் 642 பில்லியன் டாலரை எட்டியது. இதற்குப் பிறகு, மே 2022 இல், உக்ரைனின் ரஷ்யா பிரச்சனை காரணமாக ரூபாய் அழுத்தத்தின் கீழ் வந்தபோது அது அந்த நிலைக்கு கீழே சரிந்தது.
மேலும் படிக்க | UAE Golden Visa:புதிய நுழைவு அனுமதி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது
அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்தால் என்ன நடக்கும்?
இறக்குமதி அதிகரிப்பு அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும். இதில் எண்ணெய் இறக்குமதி மிக முக்கியமானது. இதன் மூலம், அரசு தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவும், இந்தியாவின் நாணயத்தை வலுப்படுத்தவும் உதவும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல், அதாவது ரெமிடன்ஸ் ஒரு முக்கிய பகுதியாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதமாகும். பல்வேறு பொருளாதாரக் கவலைகளால் சமீபகாலமாக அழுத்தத்தில் உள்ள இந்தியாவின் வெளித் துறைக்கும் இது ஒரு நிம்மதியான நிலையாகும்.
இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் போது, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் பொருளாதாரத்திற்கு உதவுகிறது. சேவை ஏற்றுமதிகளுக்குப் பிறகு வெளி நிதியுதவியின் இரண்டாவது பெரிய ஆதாரமாக அவை உள்ளன.
மேலும் படிக்க | UAE: வேலை வாய்ப்புகளை அதிகரித்த தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ