குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். பயணம் மேற்கொள்ள குழந்தைகளுக்கு பிசிஆர் (பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) பரிசோதனை செய்ய வேண்டுமா இல்லை, வயது காரணமாக அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா, அதற்கு பதிலாக தடுப்பூசி சான்றிதழைக் காட்ட முடியுமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு விமான பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கான கோவிட்-19 பயணத் நெறிமுறைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரமான வழிகாட்டி இங்கே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயணிகளுக்கான பொதுவான வழிகாட்டுதல்கள்


பொதுவாக, இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MOHFW) வழங்கிய வழிகாட்டுதல்கள், இந்தியாவிற்கு வரும் சர்வதேசப் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் விபரம்:


1. கடந்த 14 நாட்கள் பயண விவரங்கள் உட்பட, திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன், ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் ( https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration ) முழுமையான மற்றும் உண்மைத் தகவலை சுய அறிவிப்புப் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.


மேலும் படிக்க | சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: சென்னை - சிங்கப்பூர் வழிதடத்தில் சூடுபிடிக்கும் டிக்கெட் முன்பதிவு


2. COVID-19 RT-PCR நெகடிவ் முடிவு  அறிக்கை அல்லது கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதற்கான சான்றிதzஐ பதிவேற்றவும் (பயணத்தை மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்)


3. அறிக்கையின் நம்பகத்தன்மை தொடர்பாக ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்கவும்.  போலியான அறிக்கை என சம்பந்தப்பட்ட பயணிக்கு எதிராக  குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு PCR பரிசோதனையிலிருந்து விலக்கு. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், வருகையின் போது அல்லது சுய-கண்காணிப்புக் காலத்தின் போது கோவிட்-19 தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறையின்படி சிகிச்சையளிக்கப்படுவார்கள்.


உங்கள் குழந்தையின் வயது, ஐந்து வயதுக்கு மேல் இருந்தால், அவர் பின்வரும் இரண்டில் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்:


1. முழுமையாக தடுப்பூசி போடுங்கள். பிப்ரவரி 28, 2022 அன்று MOHFW ஆல் அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலின்படி, UAE யில் போடப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படும். கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை காட்ட வேண்டும். அல்லது


2. விமானம் புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் PCR பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எனது குழந்தைக்கு எந்த வயதில் தடுப்பூசி போடலாம்?


இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP) மற்றும் ஒவ்வொரு எமிரேட்டில் உள்ள உள்ளூர் சுகாதார அமைப்புகளும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளன.


முன்னதாக, மே 2021 இல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கடுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து 12 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியின் அவசர கால உள்ளூர் பயன்பாட்டிற்கு MOHAP ஒப்புதல் அளித்தது.


மே 2021 நிலவரப்படி, துபாய் ஹெல்த் அத்தாரிட்டி (DHA) ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட்-19 தடுப்பூசியை பின்வரும் குழுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கி வருகிறது:
- நாள்பட்ட நோய்கள் கொண்ட குழந்தைகள்
- நோய் பாதிக்கப்படக்கூடிய குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்பவர்கள்
- மருத்துவ காரணங்களால் தடுப்பூசி பெற முடியாத குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்பவர்கள்.


மேலும் படிக்க | LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR