பாஸ்போர்ட் புதுப்பித்தல்: துபாயில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இந்திய தூதரகம்
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான பெரும் அவசரத்தை எதிர்கொள்ள துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நடத்திய சிறப்பு வாக் இன் முகாம்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துபாய்: 'தத்கால்' சேவையின் கீழ் அவசரகால பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க துபாயில் உள்ள இந்தியர்கள் இனி வாக் இன் மூலம், அதாவது அப்படியே வந்து பணிகளை செய்துகொள்ளலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதரகம் மூலம் தெரிவிகப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான பெரும் அவசரத்தை எதிர்கொள்ள துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நடத்திய சிறப்பு வாக் இன் முகாம்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சுமார் 2,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.
பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான அவுட்சோர்ஸ் சேவை வழங்குநராக பிஎல்எஸ் இன்டர்நேஷனல் உள்ளது. பிஎல்எஸ் இன்டர்நேஷனலுடனான சந்திப்புகளைப் பெறுவதில் உள்ள தாமதங்கள் குறித்து சமூக உறுப்பினர்கள் தங்கள் கவலைகளை எழுப்பிய பின்னர், அனைத்து 'தத்கால்' விண்ணப்பங்களுக்கும் வாக்-இன் சேவையை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்த தேதிகளில் அவசரகால பாஸ்போர்ட் சேவை முகாம்கள்: துபாய் இந்திய துணைத் தூதரகம்
பிஎல்எஸ் செயல்படும் அனைத்து நாட்களிலும் தத்கால் விண்ணப்பங்களுக்கான வாக்-இன் சேவை கிடைக்கும். இது துபாயில் உள்ள மையங்களில் தொடங்கி பின்னர் பிற அமீரக நகரங்களிலும் செயல்படுத்தப்படும்.
அவசரகால பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான தத்கால் விண்ணப்பங்கள் ஒரே நாளில் செயலாக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும். டெலிவரிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப, நேரடியாகவோ அல்லது கூரியர் மூலமாக டெலிவரி செய்யப்படும். பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு முன் போலீஸ் சரிபார்ப்பு இல்லாத நிலையில், தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே தத்கால் பிரிவின் கீழ் அனுமதிக்கப்படும்.
அவசர பயணத் தேவைகள், குறிப்பாக மருத்துவ அவசரநிலைகள் அல்லது குடும்பத்தில் மரணம் காரணமாக பயணிக்க வேண்டியவர்கள் ஆகியோரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். வழக்கமான சூழ்நிலைகளில் கூட மூத்த குடிமக்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் செயல்படுத்த எந்த நியமனமும் தேவையில்லை.
செயல்முறைகளை சீரமைக்கவும், பின்னடைவைத் தவிர்க்கவும் தூதரகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவைகளுக்கான நியமனங்களுக்கான காத்திருப்பு காலம் தற்போது ஒரு வாரமாக குறைந்துள்ளது. இது குறைந்தபட்ச காத்திருப்பு காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்தியாவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான பாஸ்போர்ட்டுகளை வழங்கும் அமைப்புகளில் ஒன்றாகும். ஆண்டுக்கு சுமார் 200,000 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அதிக தேவை காரணமாக, தற்போது, தூதரகம் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பாஸ்போர்ட்டுகளை செயலாக்குகிறது.
கோவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, பயணம் செய்ய விரும்பும் இந்திய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததே பெரும் அவசரத்துக்குக் காரணம் என்று தூதரகம் கூறுகிறது. மேலும், சமூக விலகல் விதிகள் நடைமுறையில் இருக்கும்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
விசா புதுப்பித்தல், புதிய வேலைக்கு விண்ணப்பித்தல், கல்வி நோக்கங்களுக்காக என்ஆர்ஐ சான்றிதழ்கள் பெறுதல், காவல்துறை அனுமதிச் சான்றிதழ்கள் போன்றவற்றுக்கு பாஸ்போர்ட் புதுப்பித்தல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஞாயிற்றுக்கிழமை வாக் இன் முகாம்கள் நடத்தப்பட்டன.
மேலும் படிக்க | துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: மளிகை பொருட்களுக்கு 50% தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR