அபுதாபியை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் பல காலியிடங்களுக்கு பணியமர்த்துகிறது. ஜூன் 13 திங்கட்கிழமை முதல், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் துபாயில் உள்ள துசித் தானி ஹோட்டலில் தங்கள் CV களை பதிவு செய்து சமர்ப்பிக்கலாம் என்று UAE  பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 எதிஹாட் ஏர்வேஸ் தற்போது 2022 ஆம் ஆண்டில் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருகிறது. துபாயில் 13 ஜூன் 2022 திங்கட்கிழமை தொடங்கும் வாரத்தில் எட்டிஹாட் கேபின் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு  நடவடிக்கையை தொடக்குகிறது.


மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை 


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் திங்கள்கிழமை துசித் தானி துபாயில் தங்கள் CV களை பதிவு செய்து சமர்ப்பிக்கலாம் என்று Ab Dhabi-ஐ தளமாகக் கொண்ட விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட் ஏர்வேஸ், விருந்தோம்பல் அனுபவமுள்ள 1,000 நபர்களை தனது கேபின் க்ரூ குழுவில் சேர்ப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது.


மேலும் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்ட சில ஊழியர்களை விமானத் துறை வேகமாக மீண்டும் பணியில் அமர்த்துகிறது. உள்ளூர் விமான நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் தங்கள் இணையதளங்களில் சுமார் 300 வேலைகளை பட்டியலிட்டுள்ளனர்.



தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டிற்காக   ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் , அழைக்கப்படுவார்கள் என்று Etihad அறிக்கை தெரிவித்துள்ளது.


"எட்டிஹாட் கேபின் குழுவினருக்கு  நல்ல ஊதியத்துடன், அதில் நவீன தங்குமிட வசதிகள் மற்றும் பயணக் கொடுப்பனவுகள்ளும் கிடைக்கும் எனவும், கற்றுக்கொள்ளவும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது" என்று நிறுவனம் கூறியது.


மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR