மாலத்தீவு தலைநகர் மாலேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 இந்தியர்கள் மரணம்!
மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள நெரிசலான தங்குமிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் 8 இந்தியர்கள் உட்பட குறைந்தது 10 பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது.
மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள நெரிசலான தங்குமிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் 8 இந்தியர்கள் உட்பட குறைந்தது 10 பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது. தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மாலத்தீவு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், அவர்களை +9607361452 ; +9607790701 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம எனவும் ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளார்.
"மாலேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இது இந்திய நாட்டவர்கள் சிலர் இறந்துவிட்டனர்" என்று ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. தீயை அணைக்க சுமார் நான்கு மணிநேரம் ஆனதாக ஆண் தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து, தீயில் எரிந்து சேதமடைந்த 10 உடல்கள் மீட்கப்பட்டன. தரைத்தளத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் இருந்து தீ உருவானது" என்று தீயணைப்பு சேவை அதிகாரி கூறினார்.
மாலத்தீவுகளின் தலைநகரமான மாலே, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும். உயிரிழந்தவர்களில் பங்களாதேஷ் பிரஜையும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | அமைச்சரோடு துபாய்க்கு சுற்றுலா - உற்சாகத்தில் மாணவ, மாணவிகள்
மாலத்தீவு அரசியல் கட்சிகள் வெளிநாட்டு பணியாளர்கள் வாழும் நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளன. வெளிநாட்டை சேர்ந்த லட்சக்கணக்கானோர், பெரும்பாலும் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது அவர்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் அமபலமாயின. அப்போது உள்ளூர் மக்களுடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டு தொழிலாளர்களிடையே, தொற்று மூன்று மடங்கு வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சாதித்த இந்தியர்! $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த Zoho!
மேலும் படிக்க | தொங்கு பாலங்கள் ஆபத்தானதா... குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ