இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பான பேச்சுக்கள் இலங்கையில் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நேற்று அந்த நாட்டின் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து அந்நாட்டின் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், “தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வாறான சூழலில் 1980களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த ஆதரவோடு தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபையை ஆதரிக்கவோ, வரவேற்கவோ நாம் தயாராக இல்லை. 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த யுத்தம் என்பது, இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் சிலரால் முன்னெடுக்கப்பட்ட தவறான வழிமுறைக்கு கிடைத்த தோல்வியாகவே அனைவரும் கருத வேண்டுமே தவிர, தமிழ் மக்கள் தோல்வியுற்ற சம்பவமாக அதனை யாரும் கருதக்கூடாடது.


தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற சில இனவாத சக்திகள், தங்களின் அரசியல் நலன்களுக்காக, தமிழ் மக்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.


மேலும் படிக்க | கொத்து கொத்தாக நீக்கப்படும் பணியாளர்கள்: விழி பிதுங்கி நிற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்


இதுவே பிரச்னைகள் இன்னும் தீராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறெனினும், தமிழ் மக்களின்  நியாயமான  நிலைப்பாட்டினை தற்போதைய ஜனாதிபதி தெளிவாக புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.


மேலும் படிக்க | பாஸ்போர்ட்டில் பெயர் இப்படி இருந்தால் UAE-ல் நுழைய அனுமதி கிடைக்காது


மேலும் படிக்க | லண்டனில் பாஜக ஆதரவுப் பேரணி நடத்தும் வெளிநாடுவாழ் குஜராத்திகள்


மேலும்  படிக்க | Gig workers: தற்காலிக தொழிலாளர்களுக்கு காப்பீட்டு வசதியை அதிகரிக்கும் சிங்கப்பூர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ